மக்களின் இறுதி ஆணையும் ,முடிவும்
எம் பாசத்துக்கு உரிய தமிழீழ மக்களே ...!. எமது உரிமை போரடமானது பல சதாபதங்களை ,இழப்புகளை,துரோகங் களை கடந்து இன்று மிகவும் உலகளாவிய ரீதியில் பெரும் ஆலவிருசமாக விரிவடைந்து உலகமே வியட்கும் அளவிற்று விஸ்வருபம் எடுத்து வருகிறது .இதட்குக் முழுக்காரணமும் எமது தேசிய தலைமயின் உறுதியான எந்த விட்டுகொடுபுகளும் அற்ற கொள்கையும் ,அந்த கொள்கைக்கு முழுமையாக தலைவணங்கி அந்த தலைமயின் பின்னால் ஓரணியாக எழுச்சியாக பயணிக்கும் எமது புலம் பெயர் உறவுகளும் ,எமது தலைமையின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக சரியாக உணர்ந்து பௌதறிவு சிந்தனையுடன் மிகத்தெளிவாக எதிரியின் கோட்டைக்குள் இருந்து கொண்டு போராடிவரும் எமது தாயாக உறவுகளின் உறுதி தன்மையே மிகபெரிய கரணம் .இதட்கு மிகமிக பொருத்தமான இன்றைய இறுதி சான்று நடந்து முடிந்த இந்த பாராளுமன்ற தேர்தலே ஆகும் .
எந்த அடிப்படை உரிமைக் கொள்கைகளைக் கொண்ட தமிழீழ விடிவே ஒரே தீர்வு என்ற ஜனநாயகப் போராடத்தை தந்தை செல்வா அவர்கள் முன்னெடுக்கும் போது எமது மக்கள் ஒன்று திரண்டு ஆதரித்து ஆணை கொடுத்தார்களோ ....!, எந்த ஒரு விட்டு கொடுப்புகளும் இல்லாது எந்த கொள்கையில் தமது ஆயுதங்களை தாமாகவே மெளனிக்கும் வரை ஆயுதபோரடத்தையும் ,அரசியல் நகர்வையும் முனெடுத்த தமிழீழ விடுதலை புலிகள் முன்னால் அணி திரண்டார்களோ அதேகொள்கையிலும் ,அதே தலைமையிலும் மக்கள் இன்றுவரை மிகத்தெளிவாக இருக்கிறார்கள் .மிகத்தெளிவாக தமது உண்மையான தலைமை எது என்பதை மீண்டும் ஒருமுறை உலக்கும் ,ராஜதந்திரம் என்று பகிரங்கமாக சொல்லி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைமைகளுக்கு " எப்படி இருக்கிறது எமது இராஜதந்திரம் ...! "என மிகத்தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள் எமது தாயாக உறவுகள் அரசியல் என்ற தளத்தில் இருந்துகொண்டு தமது தலைமையின் கொள்கைவழியில் .
தமிழ் மக்களின் முழுமையான ஆணையைப் பெற்று ஆயுத ரீதியாகவும் ,அரசியல் ரீதியாகவும் போராடி உலகம் வியந்து நின்று அழிக்க முற்பட்ட ஒட்டுமொத்த உலகத்தமிழ் இனத்தின் ஒரே தேசிய இராணுவமே எமது தமிழீழ விடுதலை புலிகள் .அவர்களின் தலைமையினால் மிகவும் மதினுட்பமாக எதிரியின் கோட்டைக்குள் விடப்பட்ட மிகவும் பலம்பொருந்தி இருந்த அரசியல் மற்றும் அறிவியல் ஞானம் பெற்ற அமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு .அவர்களுக்கு அன்று தொடக்கம் இன்று வரை க்கும் மக்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் வாக்கு என்னும் தமக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு உரிமை முலமாக ஆணை வழங்கி வருவது அந்த அமைப்பை உருவாக்கிய தமது தேசியத்தலைமை மீதான முழுமையான நம்பிக்கையே அன்றி வேறு எந்த காரணமும் இருக்கவே முடியாது.அது யாவரும் அறிந்த உண்மை .
இந்த தமிழ் தேசிய கூடமைப்பு விடுதலை புலிகள் களத்தில் இருக்கும் வரை தமது அடிபடைகொள்கையில் இருந்து சிறிதும் விலகாது செயல் பட்டுவந்தது உண்மையே .ஆனால் எப்பொழுது விடுதலைபுலிகளின் ஆயுதபோராட்டம் முற்றாக முடிகபட்ட மாயாத் தோற்றம் ஏற்பட்டதோ அன்றில் இருந்து இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அடிபடைகொள்கையில் இருந்து விலகுவது போன்ற தோற்றம் இன்றுவரை காட்டிவருகிறது .அதனை உணராது மக்களை தடுபதட்காக அல்லது உண்மையாக தமது அரசியல் நகர்வை சரிவரச் செய்வதட்க்கோ மக்கள் முன் தனது கொள்கையை இராஜதந்திர நகர்வு என்பதை எடுத்து உரைத்துவருகிறது .இது ஒரு புதிய குழப்பமே ...!.
அரசியல் போராட்டமும் ,ஆயுத போராட்டமும் இரண்டும் சற்று வேறு வேறு பட்டவையே .ஆயுத போராடமனது தனியே உறுதியான ஒரு கொள்கையின் படி ஒரேவழியில் பயணிக்கக் கூடியது .ஆனால் அரசியல் என்பது பலவழிகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளைந்தும் ,நெளிந்தும் ,பணிந்தும் ,வேண்டிய இடத்தில விலைபோகியும் தமது இலக்கை அடைய வேண்டிய ஒரு சிக்கல் மிக்க ஒருதளம் தான் .அதனால் தான் அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று முன்மொழியப்பட்டு வழி மொழியப்படுகிறது.அதட்காக நான் தமிழ் தேசிய கூட்டமைப்பை இன்று ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை .அரசியலின் உண்மை தன்மையை எது என்பதை சொல்லுகிறேன் .நியாயபடுதவில்லை .
எந்த ஒரு உயரிய நோக்கத்துக்காக மிகவும் சிரமப்பட்டு மிகத்திறமையாக உலகம் வியக்க எமது தேசிய தலைமையால் உருவாகக்கபட்ட மிகவும் அரசியல் தனிபலம் கொண்ட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைரீதியாக என்று வெளித் தோற்றத்துக்குக் காரணம் கட்டிக்கொண்டு பல பிரிவுகளாக பிளவு பட்டு எம்மை இடியாக நிலைகுலைய வைத்துள்ளது இன்று .ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி கரிபூசியா படியே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்மொழிந்தார்கள்.எதிரி எதனை உருவாக்க துடிதானோ ,அதனை தாமே உருவாக்கியபடி எமது புலம்பெயர் உறவுகளையும் ,எதிரியின் கோட்டைக்குள் இருந்து தினம் தினம் தினறிக்கொண்டு இருக்கும் எம் தாயாக உறவுகளையும் தாமே குழப்ப முன்வந்து செயல் பட்டுக் கொண்டு இருந்தனர் .இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் தமது வார்த்தை ஜாலங்களால் இணையதளங்கள் முலமாக .ஆனால் எமது மக்கள் எத்தனை இன்னல்களையும் ,துரோகங்களையும் மாறி மாறி தொடர்சியாக அனுபவித்தாலும் தமது முடிவை அன்று தொடக்கம் இன்றுவரை மிகத் தெளிவாக நேரடியாகவும் ,இராஜதந்திரமாகவும் உலகிற்கும் ,சம்பந்தபட்ட தரப்பிற்கும் தெரிவித்தே வருகிறார்கள் .
புலிகளை ஒட்டுமொத்த உலகமும் ,இலங்கை அரசாங்கமும் முற்றாக அழித்தது விட்டதாக சொல்லி மார்பு அடித்து கொண்டிருந்த வேளை எந்த இலட்சியத்துக்காக தமது கைகளில் ஆயுதம் ஏந்தி உரிமைபோரடத்தை தொடர்ந்தார்களோ புலிகள் அந்த இலட்சியதைகொண்ட ,அன்று தந்தை செல்வாவால் மக்கள் ஆணையுடன் நிறைவேற்றிய வட்டுகோட்டை தீர்மானத்தை உலகு எங்கும் வீச்சாக ,உறுதியோடு வேர்பரப்பி வாழும் எம் புலம்பெயர் உறவுகள் மீண்டும் ஒருமுறை உலகமே ஏன் இலங்கை அரசாங்கமே நடுநடுங்கும் அளவிற்கு தமது வாக்குகளை 98% அதிகமாக வழங்கி தமது வரலாற்று கடமைக்கு வலு சேர்த்து வருகிறார்கள் .
அதே போல் இன்னும் பலமடங்கு இராஜதந்திரமாக எதிரியின் கோட்டைக்குள் இருந்து கொண்டு பல அழிவுகள் துரோகங்களுகுள்ளும் ,குழப்பங்கள் உள்ளும் ஜனாதிபதி தேர்தலுக்கு தக்க பதிலடியையும் கொடுத்த எமது தாயாக உறவுகள் .இன்றும் மிகத்தெளிவாக தமது பதிலை இந்த நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெளிகாட்டி நிக்கின்றனர் .அது என்ன செய்தி ...!? இதுதான் அது .
" நாம் உங்கள் மீது நம்பிக்கையும் ,உறுதியும் வைத்து இருந்தோம் இறுதிவரை .எதுக்காக ? எமது தேசிய தலைமையினால் உருவாக்கபட்ட உறுதியான எமது இலட்சிய கொள்கைபிசகாத விலை போகாத அரசியல் கட்சி என்பதால் .ஆனால் எமது தேசிய தலைமை மறைகபட்டார்கள் என்ற மாயை தோன்றியதும் நீங்கள் நீங்களாக இல்லாது எமது அடிப்படை உரிமை மற்றும் இலட்சிய கனவு என்பவற்றில் இருந்து விலகியும், எம்மையும் வசிய படுத்த நீங்கள் அரசியல் இலாபம் ஈட்டவும் நாம் இராஜதந்திர நகர்வை மேற்கொள்கிறோம் என்று கூறிவருகிறீர்கள் .எங்களை குழப்பி எமது போராட்ட சக்தியை மழுங்கடிக்க செயல் பட்டு வருகிறீர்கள் .ஆனாலும் 65 வருடங்களாக எல்லாவிதமான துன்பங்களையும் ,இழப்புகளையும் ,துரோகங்களையும் நன்றாகவே மக்கள் ஆகிய நாம் எமது தேசிய தலைமை ஊடாக கற்று தெளிந்து உள்ளோம் .நாம் ஒன்றும்Currentகும் ,TVக்கும் விலைபோகும் தமிழ்நாட்டு பகுத்தறிவு அற்ற மக்கள் கிடையாது .உங்களின் பருப்பு எங்களிடம் வேகாது நாமும் அறிவாலும் ,பிறப்பாலும் நியமான புலிகள் .என்று மீண்டும் ஒரு முறை உங்களில் ஒருபகுதியினரை ஓரம் கட்டியும் ,மற்றைய பகுதியினருக்கு இறுதி சந்தர்பத்தை மிகச்சிறிய வாக்குகளால் தந்தும் ,எப்போதும் எங்கள் ஏக பிரதிநிதிகள் நீங்கள் அல்ல எமக்காக உண்மையாக போராடும் எமது தேசிய இராணுவம் எமது புலிகளே ...! என்பதை நாம் இன்று எதிரியின் கோட்டைக்குள் இருந்து 85%க்கும் அதிகமான மக்கள் இத் தேர்தலை இராஜதந்திரமாக புறக்கணித்து எமது அரசியல் சானகியத்தை நாம் மீள நிருபித்து எமது புலம்பெயர் உறவுகளுடன் சேர்த்து பயணிக்கிறோம் மீண்டும் எமது இறுதி இலக்குவரை உறுதியுடன் என்பததை நிருபித்து உள்ளோம் . இந்த எமது இராஜதந்திர நகர்வு என்பது எமது பௌதாய்வு செய்து பயணிக்கும் எமது பௌக்தறிவே என்பது இதன் முழு அர்த்தம் .
இதில் ஒரு கேள்வி ஏழுகிறது .அது பலராலும் ஏற்றுகொள்ள முடியாத திணறும் ஆசாரியமான உண்மை.அதுதான் தமிழ் தேசிய கூடமைபில் இருந்து முற்றாக விலகி அல்லது தமிழ் தேசிய கூடமைப்பால் ஓரம் கட்டபட்ட புதிதாக முளைத்த தமிழ் தேசியதுக்கான மக்கள் முன்னணி என்ற அரசியல் அமைப்பு .அவர்களை ஏன் மக்களும் முழுமையாக ஓரம் கட்டினார்கள் ?
மக்களின் பார்வையில்" தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி ஆகிய நீங்கள் தீடீர் என்று பிரிந்து ,தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அடிப்படை கொள்கையில் இருந்து முற்றாக விலகி விட்டது ,அதனால் தான் நாம் அதில் இருந்து முற்றாக விலகி விட்டோம் .ஆனால் நாம் அந்த அடிபடைகொள்கையினையே நாம் எமது தேர்தல் பிரசாரமாக முன்வைக்கிறோம் நீங்கள் அந்த உண்மையினை புரிந்து எமக்கு ஆணை தாருங்கள் என்கிறீர்கள் .ஆனால் மக்கள் ஆகிய நாம் சரியான பதிலை இப்போது உங்களுக்கும் தந்துள்ளோம் .அது என்ன?உங்களின் உறுதியை மதிக்கிறோம் .ஆனால் நீங்கள் இன்னமும் செயலால் வளரவில்லை .செயலால் வளர்ந்தபின் எம்முடன் இவ்வாறு பேசுங்கள் .உங்களுக்கு நாம் ஆணை தருகிறோம் அன்று .இப்போது நீங்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் .நீங்கள் விஷ காளான்களா அல்லது நியகாளங்களா என்று சரியாக சொல்ல எமது தேசிய தலைமை தற்போது இங்கு களத்தில் இல்லை .அதனால் நம்பிக்கையுடன் உங்களுக்கு உடனடியாக எமது பலத்தை தரமுடியாது .ஏன் எனில் " நாம் அரசியல் வாதிகள் அல்ல புரட்சி வாதிகள் " என்ற தேசிய தலைமையின் சிந்தனையை இன்று செயல் வடிவமாக்கி உள்ளோம் உங்களுக்கும் சேர்த்து என்பதே உண்மை " என்று ஆணித்தரமாக இடித்து உரைத்துள்ளனர் எம் தாயாக மக்கள் இத் தேர்தலில் தமது வாக்குகளால் .
அதே நேரம் "தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் இன்னமும் நம்பவில்லை ஆனாலும் மரியாதை வைத்து உள்ளோம் .எதற்க்காக எமது தேசிய தலைமை உருவாகிய ஒருபலம் பொருந்திய அமைப்பு .ஒருவேளை நீங்கள் இராஜதந்திர நகர்வை மேற்கொளுவீர்கள் என்று 18%க்கும் குறைவான வாக்குகளால் உங்களுக்கு மீண்டும் ஆணை தந்து உள்ளோம் .ஆனால் உங்களை எமது ஏக பிரதிநிதிகளாக நினைக்கவில்லை .இந்த சந்தர்பத்தை கைவிடாது எதிரிகளுக்கும் ,துரோகிகளுக்கும் விலை போகாது ஈடு இணையற்ற எமது போராடத்தை விற்காது செயல் படவேண்டும் என்று இறுதியாக உங்களுக்கு உயிர் பிச்சை தந்து உள்ளோம் .அதே நேரம் 85% அதிகமான மக்களால் இந்த தேர்தல் முற்று முழுதாக புறக்கனிகபட்டு நாம் விடுதலை புலிகளை தவிர எந்த தலைமையுமோ அல்லது எந்த ஜனநாயக கொள்கையுமோ ஆதரிக்காது முற்றாக எதிர்க்கிறோம் .எமது தீர்ப்பு தனிநாடு ஒன்றுதான் என்பதை மிகவும் இராஜதந்திர ரீதியாக உலகுக்கும் ,சம்பந்த பட்ட தரப்புக்கும் ,இலங்கை அரசாங்கத்துக்கும் எதிரியின் கோட்டையில் இருந்து இடித்து உரைக்கிறோம் .என்பதுதான் உண்மை ".எமது மக்களின் அரசியல் மற்றும் அறிவியல் இராஜதந்திர போக்கை கண்டு இன்று இலங்கை அரசாங்கமும் ,எம்மை அழிக்க துடிக்கும் உலகமும் மீண்டும் ஒருமுறை கதிகலங்கி நிக்கின்றது செய்வது அறியாது .
எந்த உண்மையை சரிவர அறியாமல் ,அரசியல் ஞானம் அற்று பிதற்றி கொண்டு பக்கசார்பாக செயல் படும் " தமிழ்வின் " போன்ற இணைய தளங்கள் " வடகிழக்கு மக்கள் படித்தவர்கள் ,அறிவாளிகள் என்று எல்லோராலும் போற்ற பட்டவர்கள் .ஆனால் தேர்தலை பெரும்பாலானோர் புறக்கணித்து விட்டதால் புத்திஜீவிகள் எல்லோரும் விசனம் அடைகிறார்களாம் "என்று பக்க சார்பாக மக்கள் மீது பழிபோடுவது மிகவும் கீழ் தரமான ஒரு செயல் என்பதை வன்மையாக சுட்டிகாட்ட விரும்புகிறேன் .எதிரி என்னதான் கலாசார சீரழிவுகளையும் ,அரசியல் நகர்வுகளையும் ,வன்முறைகளையும் எம் மக்கள் மீது திணித்தாலும் எம் மக்கள் அன்றும் சரி ,இன்றும் சரி விலை போகவில்லை .விலை போகவும் மாட்டார்கள் .தமது உரிமைக்காக தொடர்ந்து போராடுவார்கள் என்பதை இன்றைய உலகுக்கான இந்த நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்களின் இறுதி முடிவும் ,ஆணையும் .அவர்களின் தலைமை எப்போதும் என்றும் புலிகளே .அவர்களின் நகர்வும் அவர் தன் வழியே .தமிழீழத்தின் கதவுகள் இன்று இரு துருவங்களாக மாற்ற பட்டு விட்டது .தாயாக மக்களின் தன்னிகர் அற்ற துணிவும் துல்லியமான அரசியல ராஜதந்திர நகர்வும் ,அடுத்து இரண்டாவதாக புலம்பெயர் உறவுகள் உடன் இணைந்த உலக தமிழரின் பேர் எழுச்சியும் ,வீரம் செறிந்த நுட்பமான வரலாறு போராட முன் எடுபுகளும் .
இது தொடரும் ,தொடரவேண்டும் .இதனை மனதில் கொண்டு மக்கள் தந்த ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,மக்கள் தந்த தீர்ப்பை தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் எடுத்து சரியாக நோக்கி மீண்டும் ஒருமுறை ஒன்றாக ஒற்றுமையுடன் பயணிகவேண்டியது இன்றைய காலத்தின் களத்தின் கட்டாயம் .இல்லையேல்" நாம் யாரயும் ஏமாற்றவும் இல்லை ,துரோகம் இழைக்கவும் இல்லை .ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் ,நாம் பதில் அடிகொடுக்க தயங்க மாட்டோம் " என்ற தேசிய தலைமையின் சிந்தனை செயல் வடிவமாகும் என்பது மக்களின் கடைசி எச்சரிக்கையும் ,முடிவும் கூட .
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
நன்றி
ஆக்கம் உங்கள் அக்கினி புத்திரன் (மீண்டும் வருவான் )
சிங்க தேசமும் நரிகளும்....!
அதிய மலை எனும் நாட்டின் அடி நாடாக விளங்கிய நாடு தான் சிங்க தேசம்.
இங்கே சிங்க தேசத்தில் ஆட்டங்களும் பாட்டங்களுக்கும் குறைவே இல்லை. ஆட்டம் பாட்டம் நடந்தால் தான் குடிமக்கள் வாழலாம் என்ற நிலையில் குடிகளும் அதையே விரும்பிநின்றது. திருவிழா காலம் ஆதலால் வேட்டை ராஜாக்களும் பட்டை அணிந்து பவ்வியமாக கோவில் வந்து சேர்ந்தார்கள். சிங்க தேசத்து அரண்மனையில் அதிய மலை ஆசியுடன் நரிகள் புலிகள் ஆகின
புலிகள் நரிகள் ஆக்கப்பட்டன.
புலிகள் ஆகிய நரிகள் பசி எடுக்க ஊளை இட்டு தன்னை காட்டி கொடுத்துவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. பசிகொண்டு நின்ற முயல்கள்
புலி தேசத்தை மறந்தோ புரிந்து கொள்ளாமலோ நரிகளிடம் ஏமாந்து கொள்கின்றதே உண்மை. பசி காக்க நரியிடம் ஏமார்ந்த முயல்கள் வாழ்ந்த வளை இல்லாது போக கடல் கடந்து உயிர் காக்க ஓடலாம்
இல்லையேல் புலித்தேவன் தான் ஒரே வழி என்று கூக்குரல் இடவும் கூடும். இல்லையேல் முயல் முயலாக இல்லாது நரியாக மாறி இறுதியில் சிங்கமாக தான் மாற வேண்டும். இதுவே சிங்கதேச ராஜாவின் தந்திரமும் ஆகும்.
இதைத் அறியா நரியாரும் தனக்குத் தான் தந்திரம் தெரியும் என்று எண்ணி நின்றது. பாவம் நரியார் இறுதியில் முயல்களால் அடித்திகலைக்கப்பட்டதே உண்மை ஆனது. முயல்கள் மீண்டும் கூடி புலித்தேவனை வேண்டி நிற்ப்பார்கள். அவ்வேளை புலித்தேவன் வந்து புலி தேசம் மீட்டு தருவாரா இல்லை
முயல்கள் கடல் கடந்து அனாதியாகி நிற்கவேண்டியது தானா?

முடிவு விடுகதைப் புதிர் இல்லாது முடிகவேண்டியது முயல்கள் ஆகிய உங்கள் கைகளில் இன்று.
- ஆக்கம் ஜெயந்தன் பரா -
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மாற்றான் குடியல்ல
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மாற்றான் குடியல்ல; உங்கள் இரத்த உறவுகளே
புலம்பெயரந்தவர்கள் ஒன்றும் கூண்டோடு குடிபெயர்ந்தவர்கள் அல்ல. சராசரி ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனுக்கும் பாதிக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஈழத்திலுண்டு. அதனால் தான் அவன் உணர்வுகொண்டு வீதிகளில் இறங்கிப் போராடுகிறான். புலத்தில் இருந்து கொண்டு வாக்குப் போடுவர்களை திசை திருப்பி தமிழர் ஒற்றுமைகளைக் குலைக்கிறோம் என்பது அபத்தம். அங்குள்ளவர்களுக்குத் தெரியும் யாருக்கு வாக்குப் போட வேண்டுமென்று. எமது உறவுகளுக்கு எமது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். சிங்களத்தின் காலை நக்கிப் பிழைக்க நினைக்கும் ஒரு சிறிய கூட்டம் தான் வெறும் அச்சத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் புலம்பெயர் சமூகம் மீது ஏவப் பார்க்கின்றது. இதற்காக நாங்காள் வாளா இருக்க நாம் ஒன்றும் உணர்வற்றவர்களல்ல. தொடர்ந்தும் எம்மின விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைப்போம்.

எங்கள் சராசரி குடும்பங்களில் 2/3 பேர் ஈழத்தில் இன்றும் உள்ளனர். ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனுக்கும் பாதிக்கு மேற்பட்ட உறவுகள் ஈழத்தில் வாழ்கிறார்கள். புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளே. நாளை எம்மினத்திற்குத் துயரென்றால் எந்த இடர்களுக்கும் மத்தியில் வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம். இங்குள்ள காவற்துறைகளிடம் அடி வாங்கியிருக்கிறோம், இங்குள்ள மக்கள் நாம் விதியில் இறங்கியதால் வந்த அசெளகரியங்களால் எம்மீது காறி உமிழ்ந்துள்ளனர், உயிரைக் கொடுத்துள்ளோம், உணர்வையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம், தொடர் போராட்டத்தால் மாணவர்கள் ஒருவருடக் கல்வியை இழந்துள்ளார்கள். புலம்பெயர்ந்தவன் எல்லாம் நிம்மதியாக ஏக, போக வாழ்வு வாழ்கிறான் என்று நினைக்க வேண்டாம். நாமும் உங்கள் உறவுகளே.
தமக்கான ஆயுத பலத்தையும், தம் பாதுகாவலர்களையும் இழந்த ஈழத் தமிழர்கள் வாய்திறந்து பேச முடியாத நிலையில் மீண்டும் ஆயுத முனையில் அடிமைப்படுதத்தப் பட்டுள்ளார்கள்.

தமிழின விடிவிற்காகவும் வளர்ச்சிக்காகவும் வாருங்கள் இணைவோம்; ஒன்றுபட்டு தமிழின விடிவுக்காக உழைப்போம்.
ஆக்கம் சூரியா
இணைப்பு அக்கினி புத்திரன்
மகிந்தாவுக்கு முடிவுரை.....!
பூமி உருண்டையானது. அது மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தாமும் இயங்கிக் கொண்டு, வரலாற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் தன்மை வாய்ந்தது. இந்த இயக்கத்தில் பல்வேறு நிகழ்வுகள், அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். சில நிகழ்வுகள் வியப்பை தந்திருக்கலாம். சில அச்சத்தையும், வேறு சில மகிழ்வையும் விளைவித்திருக்கலாம். இவை அனைத்தும் மாறி மாறி நிகழ வேண்டும் என்பது ஒரு நியதி. மாற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கால ஓட்டத்தில் அனைத்தும் கலந்து அடித்துச் செல்லப்படும். அவைகளின் திடமான பதிவுகள் வரலாறாய் நிலைத்து நிற்கும். அந்த அடிப்படையில்தான் பல்வேறு சம்பவங்கள் நமக்கு நினைவுகளாய் நிலைத்து விடுகின்றன. அவை நாம் விரும்பினாலும் மனங்களைவிட்டு அகன்று போகவில்லை. இது கால, சமூக கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாந்தகுலம் ஏற்று, அனுபவித்துவரும் ஒரு இயக்கவியல் கோட்பாடு. இதிலிருந்து யாராலும் மீற முடியாது. இதிலிருந்து ஒருவரும் தப்பித்துச் செல்ல முடியாது.
எந்த மனிதனும் இயந்திரத்தனமாக வாழ்வதற்கு காலம் அனுமதிப்பதில்லை. அழுகையும், சிரிப்பும், கவலையும், மகிழ்வும் கலந்து தான் காலம் நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அழுத காலம் நிறைவு பெறத் தொடங்கிவிட்டது. நமது சிரிப்பின் காலம் தொடங்கிவிட்டது. நமது தேசிய தலைவரின் ஆழ்ந்த அரசியல் அறிவு, அதன் அடிப்படை நகர்வுகள் சிங்கள பேரினவாத பேயாட்டத்தின் தத்துவார்த்த தவறுகளை நன்கு அறிந்த காரணத்தால் நாம், நமது கருவிகளை களத்தில் அமர செய்துவிட்டு, அவர்களுக்குள்ளான கருவி ஏந்தலை கணித்துக் கொடுத்திருக்கிறோம். மகிந்தா அரசு தமது மமதையான செயல்பாட்டால் தமிழீழத்தின்மீது தொடுத்த கடுஞ்சமர் இன்று ஒரு எல்லைக்கு வந்துவிட்டது. எந்த ஒரு பயணமும் முடிவற்றதாக இருக்க முடியாது. எந்த ஒரு நிகழ்வும் தொடர்ந்து நிகழப்போவது கிடையாது. கால அளவில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
மகிந்தாவின் கொடுஞ்செயலுக்கான எல்லை, மகிந்தாவாலேயே வகுக்கப்பட்டுவிட்டது. தாம் எந்த அளவையால் அளந்தோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கின்ற கோட்பாட்டியல் மகிந்தாவின் வாழ்வில் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தமிழீழ வரலாற்றை பெரும் எழுச்சிக்கு உள்ளாக்கிய மகிந்தா, உள்ளபடியே நமது வாழ்த்துக்குரியவர். ஒருவேளை தமிழீழ வரலாற்றின் இந்த துயர், அத்தியாயம் படைக்கப்படாமல் இருந்தால், உலகலாவிய பெரும் ஒத்துழைப்பு நமக்கு இந்த அளவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். ஆனால் நமது சிந்தனை, தேசிய தலைவரின் வழிக்காட்டுதல், நாம் களமாடிய நேர்த்தி, நமது மாவீரர்களின் கனவு, நமக்கான தமிழ் தேசிய மண்ணை பெரும் வரலாற்று சிறப்போடு படைத்தளிக்க உறுதி அளித்திருக்கிறது.
கடந்த காலங்களில் நாம், ஒன்றுப்பட்ட தேசிய இனம் என்று மிகவும் ஆர்ப்பாட்டத்தோடு அறிவித்து, தேசிய அரசியல் பேசிய மகிந்தாவின் பொய் முகம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் சிலிர்த்தெழுந்து களம்காண தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த வேண்டும் என்பதிலே சிங்கள ஜனநாயக பண்பு கொண்ட மக்கள், ஒரே அணியாய் திரண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானிலே மகிந்தாவை கண்டித்து சரத்தை விடுதலை செய்யக் கோரி, சிங்கள மக்கள் கோரிக்கை முழக்கம் செய்திருக்கிறார்கள். இது சிங்கள பேரினவாதி மகிந்தாவின் ஜனநாயக துரோகத்தை உலகநாடுகளில் அம்பலப்படுத்த பெரும் உதவிப் புரிந்தது. தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து மகிந்தா ஒரு போர் குற்றவாளி.
தமிழீழ மக்கள்மீது மகிந்தா நடத்திய தாக்குதல் இன அழிப்பு நடவடிக்கை என்றெல்லாம் உயர முழங்கியபோது, அந்த குரல்களை முடமாக்கிய மகிந்தாவின் பணம், அரசியல் நிலைப்பாடுகள் இப்போது சிதறி சின்னாபின்னமாகிப் போய் கொண்டிருக்கிறது. இலங்கையிலே சரத்தை விடுதலை செய்யக்கோரி புத்தபிக்குகள் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். சரத்தை விடுதலை செய் என்று புத்த பிக்குகள் எடுத்த போராட்டத்தின் அடையாளம் மகிந்தா ஒரு கொடுங்கோலன், அடக்குமுறையாளன். அவனை எதிர்த்து யார் பேசினாலும் எழுதினாலும் அல்லது கருத்துக் கூறினாலும் அவர்களை சிறையில் அல்ல, சிரமே தறிக்க தயங்கமாட்டான் என்பதை புத்த பிக்குகளின் போராட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எந்த புத்தபிக்குகள் சிங்கள-பௌத்தத்தை உயர்த்திப்பிடித்து, சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தாங்கி, அதற்கு எதிரான நிகழ்வு நடந்தபோது, அன்பைப்பற்றி போதித்த, புத்தனின் வழி வந்தவர்கள், மனிதக்கறியை கரத்தில் ஏந்திய கொடுஞ்செயலை செய்து முடித்தவர்கள், தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள்.
அப்படி, சிங்கள பேரினவாதத்தின் அரணாக இருக்கக்கூடிய புத்த பிக்குகள், இன்று சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் மகிந்தாவை எதிர்த்து களம் கண்டிருப்பது, இலங்கை-சிங்கள தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை உண்டாக்கப்போகிறது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. மகிந்தாவின் வீழ்ச்சி படிப்படியாய் தொடங்கிவிட்டதின் அடையாளம்தான் இன்று மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிந்தா, சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல, தமிழின துரோகிகளை தமது பக்கத்தில் அமரச் செய்து, தமிழனை காயடிக்கும் அரசியலை செய்யப்புறப்பட்டு, அதற்கு எச்சில் துண்டுகளாக மந்திரி பதவிகளையும், பணத்தையும் வழங்கியதை வாலாட்டிக் கொண்டு, நாய் பிழைப்பு பிழைக்கும் இந்த நயவஞ்சக துரோகிகள், மகிந்தாவின் பக்கத்தில் சிரிக்க சிரிக்க நின்ற நிகழ்வுகள், இன்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எமது தேசிய ராணுவம் தமிழீழ பகுதிக்குள் நிலைக்கொண்டிருந்தவரை, தமிழீழ பகுதிக்குள் எட்டிப் பார்க்கக்கூட அச்சம் கொண்டிருந்த மகிந்தா, இன்று எமது தேசிய ராணுவம் இல்லாத தைரியத்தில் தமிழீழ மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று, மூக்கறுப்பட்டு திரும்பி இருக்கிறார். பெருமளவில் ஆள்திரட்டி மகிந்தாவை குளிர செய்யலாம் என தமிழின துரோகிகள் போட்ட திட்டம் தவிடுப்பொடியாகி இருக்கிறது. மேடையிலேயே கோபப்பட்டு வெளிப்படுத்திய மகிந்தா, தமது சரிவை உறுதி செய்திருக்கிறார். தோல்வி காண்பவர்களுக்கும், எதிர்சமர் புரிய அச்சப்படுபவர்களுக்கும் தான் கோபம் என்பது இயல்பான உணர்ச்சியாக வெளிப்படும். மகிந்தா, அச்சத்திலிருப்பதின் வெளிப்பாடுதான், மேடையின்மீது மகிந்தா பட்ட கோபம் என்பது நமக்கு தெளிவாகிறது.
எமது பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். முட்டாளுக்கு மூன்று இடத்தில் மலம் என. காலில் மிதித்த மலத்தை கழுவிக் கொள்ளாமல் அதை கையிலே தொட்டு, மூக்கிலேயும் முகர்ந்து பார்க்கும் போக்கைத்தான் இப்படி ஒரு பழமொழியாக சொல்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த பழமொழி மகிந்தாவிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. காரணம், தமிழீழ மக்களை கொன்றொழித்து, பெரும் வெற்றி கண்டதாக நினைத்து, தமிழ் பகுதிக்குச் சென்று மக்களின் சலனத்தை கண்டு எரிச்சலடைந்து, மேடையிலேயே மக்களை திட்டித்தீர்த்த அந்தப்போக்க, மகிந்தாவின் முட்டாள்தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. ஆக, எந்த ஒரு ஜனநாயகத்திற்கெதிரான மனிதனாக இருந்தாலும் அவன் நிச்சயமாக ஒருநாள் மாந்த குலத்தின் காலடியில் மண்டியிட்டேத் தீருவான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
அப்படி ஜனநாயகத்தை சிதைத்து, மாந்த குலத்தை ஒழிக்க முனைந்த பல கொடுங்கோலர்கள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்போதும்கூட மகிந்தாவின் மமதை, மகிந்தாவின் வீழ்ச்சிக்கு அடையாளமாக, தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கும் அடிப்படை செய்தி என்னதென்றால், உலக வரலாற்றில் மாந்த குலத்திற்கெதிரான ஆற்றல்களை ஒடுக்கிய மக்களின் பேராற்றல், மகிந்தாவிற்கெதிராக திசை திரும்ப தொடங்கியிருக்கிறது. இது, நடைபெறும் தேர்தலில் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் நாளடைவில் இது நிச்சயமாய் பெரும் எழுச்சியாய் மாறப்போகிறது. இந்த எழுச்சியை முறியடிக்க எந்த ஆதிக்க ஆற்றலாலும் முடியாது. மகிந்தாவின் முடிவுரைக்கு தொடக்கமே மகிந்தாவின் செயல்களாக அடையாளப்படுத்துகின்றன.
-கண்மணி-
மீள் பதிவு: கரும்புலிகள் உயிராயுதம்
இணைப்பு : அக்கினி புத்திரன்

எங்கள் செஞ்சோலைப் பிஞ்சுகள்
குருதியில்
தோய்ந்து கண்ணீரால்
கழுவப்படும் தமிழரின்
நீண்ட சோக வரலாற்றில்
`2006 ஆகஸ்ட் 14' ஈனர்
படைகளின் ஈவிரக்கமற்ற
தாக்குதல்களால்
பரிதாபகரமாகக்
கொல்லப்பட்ட 61
பிஞ்சுகளின் குருதியால்
எழுதப்பட்டுள்ளது.
நான்கு மாத பச்சிளம்
குழந்தையை கண்முன்னே துடித
ுடிக்க சுட்டுக்கொல்லும்
வெறிபிடித்த சிங்கள
ஆக்கிரமிப்பாளர்களுக்கு இத
ுவொரு பொருட்டாக
இல்லாது போனாலும் அழுது...
அழுது... ஆறமுடியாமல்
அகதிகளாய் அலையும்
தமிழினத்தால் இதைத்
தாங்கிக் கொள்ளும்
சக்தியில்லையென்றே கூறவேண்
டும்.
முல்லைத்தீவு மாவட்டம்
வல்லிபுனத்தில் `செஞ்சோலை'
சிறுமிகள் இல்லத்தின்
வளாகமொன்றுள்ளது. இந்த
வளாகமே கடந்த ஆகஸ்ட் 14
ஆம்
திகதி திங்கட்கிழமை காலை 7
மணியளவில் கண்மூடித்தனமான
வான்
தாக்குதல்களுக்கு இலக்காகி
யது. பேரினவாத அரச
படைகளின் நான்கு அதிவேக
யுத்த விமானங்கள்
மிலேச்சத்தனமாக வீசிய 16
குண்டுகளும் 61
பாடசாலை மாணவிகளின்
உயிர்களை பறித்ததுடன் 155
இற்கும் அதிகமான மாணவிகள்
படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில்
சிலரது உடல்கள்
சிதறியபடி காணப்பட்டன.
காயமடைந்தவர்களில் 25
மாணவிகளது நிலைமை கவலைக்கி
டமாகவுள்ளதாக
வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் பலர்
அவயவங்களை இழந்திருப்பதாகவ
ும் சிலர் கைகள், கால்கள்
இரண்டையும்
இழந்திருப்பதாகவும்
கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள்
முல்லைத்தீவு,
புதுக்குடியிருப்பு,
தர்மபுரம்,
கிளிநொச்சி ஆகிய
பொது வைத்தியசாலைகளிலும்
தனியார்
வைத்தியசாலைகளிலும்
உடனடியாக
அனுமதிக்கப்பட்டனர்.
தமது பிள்ளைகள்
தங்கியிருந்த
பகுதி மீது குண்டுத்
தாக்குதல்கள்
இடம்பெற்றதை அறிந்த
பெற்றோர்
அலறியடித்தவாறு செஞ்சோலை வ
ளாகத்துக்கு ஓடிவந்தனர்.
கொல்லப்பட்டவர்களில்
தமது பிள்ளையும்
உள்ளாளா என்ற ஏக்கத்துடன்
இறந்து கிடந்த மாணவிகளைத்
தேடிய குடும்பத்தினர்
கொல்லப்பட்ட
தமது பிள்ளை தான் என
தெரிந்ததும் கதறிய
கதறல்கள் அங்கிருந்த
அனைவரையும் அழவைத்தது.
"பத்து நாளும் என்னால
விட்டிட்டு இருக்க
ஏலாதுண்டு முதலில்
மாட்டேன் என்டுதான்
சொன்னன். ஆனால், நல்ல
விஷயம் எண்டு எல்லாரும்
சொன்னதால தான் விட்டனான்.
கடைசியில
இப்படியாப்போச்சு" என
தலையில் அடித்து கதறிய
தாயாரொருவர் தன் மகளைத்
தூக்கி வா வீட்ட போவோம் என
கேட்டதும் அனைவரும்
கதறியழுதனர்.
செஞ்சோலை வளாகத்தில்
அப்பாவி மாணவிகளை தறிகெட்ட
சிங்களப்
படை கொன்றது மாத்திரமல்லாம
ல் கொல்லப்பட்டவர்கள்
விடுதலைப் புலிகள்
இயக்கத்திலுள்ள சிறுவர்
போராளிகளெனக்
கூறி வெளியுலகுக்கு உண்மைய
ை மூடிமறைக்க
இனவெறி அரசாங்கம்
முயல்வது அனைவரையும்
ஆத்திரமடையச் செய்துள்ளது.
செஞ்சோலை வளாகம்
புலிகளின்
பயிற்சி முகாமெனவும்
அங்கு சிறுவயது போராளிகளே
இருந்ததாகவும் கூறி 2004
ஆம்
ஆண்டு தமது விமானமொன்று எட
ுத்த படமொன்றையும்
காட்டியுள்ளன
காட்டுமிராண்டிப் படைகள்.
இதைவிட ஒருபடி மேலே சென்ற
பேரினவாத அரசின்
அமைச்சரும்
பாதுகாப்பு நிலைவரம்
தொடர்பாக பேசவல்லவருமான
கெஹகிலிய
ரம்புக்வெல,"கொல்லப்பட்டத
ு சிறுவயது போராளிகள்.
அரசுக்கெதிராக செயற்படும்
எவராயினும் அதாவது வயது,
பால்
வேறுபாடின்றி கொல்வோம்" என
தமது அரசும்
இனவெறிபிடித்தே அலைகின்றது
என்பதனை பறைசாற்றினார்.
ஆனால், சம்பவ இடத்திற்கும்
வைத்தியசாலைகளும்
நேரடியாக
சென்று விசாரணைகளை மேற்கொண
்ட போர் நிறுத்த
கண்காணிப்புக் குழுவும்
`யுனிசெப்'பும்
கொல்லப்பட்டவர்கள்
அப்பாவி மாணவிகள்
என்பதனை வெளிப்படுத்தியது.
எனினும், தனது பொய்ப்
பிரசாரத்தை தொடர்ந்தும்
முன்னெடுத்து வருகின்றார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
ஊடக நிறுவனங்களின்
பிரதிநிதிகளை அழைத்த
ஜனாதிபதி இந்த
பொய்யையே மீண்டும்
கூறியுள்ளார். இதேவேளை,
இந்த
தாக்குதல்களுக்கு பழிக்குப
்
பழிவாங்கிவிடுவார்களென்ற
அச்சத்தில் தெற்கிலுள்ள
பாடசாலைகள்
மூடப்பட்டுள்ளன.
அப்படியானால்
அங்கே வல்லிபுனத்தில்
கொல்லப்பட்டவர்கள்
அப்பாவி தமிழ் மாணவிகள்
தான்
என்பதனை அரசு மறைமுகமாக
ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை
எவரும் இலகுவில்
புரிந்துகொள்வார்கள்.
பத்துநாள்
பயிற்சிப்பட்டறை
உண்மையில்
கொல்லப்பட்டவர்கள் யார்?
ஏன்
அங்கு கூடியிருந்தார்கள்?
காலை 7 மணிக்கு அவர்கள்
என்ன செய்தார்கள்?
முல்லைத்தீவு மாவட்டத்திலு
ள்ள வல்லிபுனம் மக்கள்
குடியிருப்புகள்
நெருக்கமாகவுள்ள பகுதி.
குடாநாட்டிலிருந்து 1995
இல்
இடம்பெயர்ந்து வன்னிக்கு ச
ென்றவர்களுக்கு இதை நன்கு
உணர்ந்து கொள்ளமுடியும்.
அங்கு தான் `செஞ்சோலை'
வளாகமும் உள்ளது.
செஞ்சோலை என்றதும்
தாயகத்தைச் சேர்ந்த
அனைவருக்கும் நன்றாக
தெரியும். இந்த
வளாகத்திலுள்ள அருகில் பல
நலன்புரி நிலையங்கள்,
வேறு பல சிறுவர் இல்லங்கள்
என பலவுள்ளன. மனிதநேய
நடவடிக்கைகள் நிறைந்த
ஒரு பகுதியே வல்லிபுனம்.
இந்த செஞ்சோலை வளாகத்தில்
தற்போது செஞ்சோலை சிறுமியர
் இல்லத்தைச்
சேர்ந்தவர்களில்லை. இந்த
வருடம் ஜனவரியில்
கிளிநொச்சியில்
அமைக்கப்பட்ட புதிய
வளாகத்துக்கு சிறுமியர்கள்
சென்றுவிட்டனர். ஆனால்,
வள்ளிபுனம் -
செஞ்சோலை வளாகம்
தொடர்ந்தும்
செஞ்சோலை வளாகமாகவே உள்ளது
. இங்கு வதிவிட
பயிற்சிப்பட்டறைகள்
நடாத்தப்படுவது வழமையானதொன
்று. காரணம்
ஏற்கனவே சிறுமியர்
இல்லமாக
இது செயற்பட்டமையால்
மாணவிகள்
தங்கியிருந்து பயிற்சிகளை
மேற்கொள்வதற்கு வசதியாக
இவ்வளாகம் இருப்பதே.
அத்துடன், இந்த வளாகம்
ஐ.நா. அமைப்புகளூடாக
பயிற்சிப் பட்டறைக்கான
இடமென
இலங்கை அரசாங்கத்தாலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல காரணங்களால்
இங்க பல பயிற்சிப்
பட்டறைகள் நடைபெற்றுவந்தன.
அதேபோன்றதொரு பயிற்சிப்
பட்டறை நடைபெற்றுக்
கொண்டிருந்த
போதே இலங்கை அரசின்
விமானப்
படை கோரத்தாண்டவமாடி தமிழர
ை துன்பத்தில்
வாடவிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல்
இச்செஞ்சோலை வளாகத்தில்
க.பொ.த. உயர்தர
மாணவிகளுக்கான 10 நாள்
வதிவிட
பயிற்சி நெறி நடைபெற்றுவந்
தது. இந்தப்
பயிற்சி நெறியின் 3 ஆம்
நாளின்
போதே இப்பேரனர்த்தம்
ஏற்பட்டுள்ளது. சமூக
தலைமைத்துவ திறன்கள்,
முதலுதவி, பால் சமத்துவம்
தன்னம்பிக்கையை கட்டியெழுப
்புதல், வினைத்திறனுடனான
நேர முகாமை மற்றும்
குழு வேலை போன்றவற்றில்
மாணவிகளுக்கு பயிற்சியளிப்
பதனை நோக்கமாகக்
கொண்டே இப்பயிற்சிப்
பட்டறை நடைபெற்று வந்தது.
இதன்போது கிளிநொச்சி,
முல்லைத்தீவு மாவட்டங்களைச
் சேர்ந்த 500 க.பொ.த.
உயர்தர மாணவிகள்
கலந்துகொண்டிருந்தனர்
எனத் தெரியவருகின்றது.
செய்தி கேட்டுக்கொண்டிருந்
த மாணவிகளே அதிகளவில்
கொல்லப்பட்டனர்.
"காலை 7 மணியளவில்
மாணவிகள் ஒன்றுகூடலுக்காக
தயாராகிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் பலர் தற்போதைய
யுத்த
சூழ்நிலை குறித்து அறிய
வானொலியில் செய்தியைக்
கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போதே விமானங்கள்
வட்டமிட்டு 16
குண்டுகளை அடுத்தடுத்து வீ
சின. செய்தியைக்
கேட்டுக்கொண்டிருந்தவர்கள
ே நேரடியாக
தாக்குதலுக்கு இலக்காகினர்
. இதில் அதிகளவானோர்
கொல்லப்பட்டதுடன்
பலருக்கு பின்புறத்தில்
மோசமான காயங்கள் ஏற்பட்டன.
வேறு வேலைகளிலிருந்த
மாணவிகள் அருகேயிருந்த
காட்டுப் பகுதிகளுக்குள்
ஓடிவிட்டனர்" என விடுதலைப்
புலிகளின் சமாதான செயலகம்
விடுத்திருக்கும்
இடைக்கால
அறிக்கை கூறுகின்றது.
தீயிலிருந்தும்
மின்னிலிருந்தும்
எவ்வாறு தப்புவது, அதேபோல
இரசாயன
பதார்த்தங்களிலிருந்து எவ்
வாறு பாதுகாப்பாயிருப்பது
, விமான
தாக்குதல்களிலிருந்து எவ்வ
ாறு தப்புவது, நாடகங்கள்,
இசை, நகைச்சுவை மூலமான
தனிநபர் வெளிப்பாடுகள்
போன்ற பயிற்சிகள்
ஆசிரியர்களாலும் துறைசார்
நிபுணர்களாலும்
கற்பிக்கப்பட்டதாக
அவ்அறிக்கை தெரிவிக்கின்றத
ு.
இதேவேளை, இந்தப்
பயிற்சிப்பட்டறை குறித்து
தமிழீழ கல்விக் கழக
பொறுப்பாளர் இளங்குமரன்
கூறுகையில்;
"இதுவொரு வருடாந்த
பயிற்சிப்பட்டறை.
கிளிநொச்சி கல்வி வலயத்தால
் ஏற்பாடு செய்யப்பட்ட
இப்பயிற்சி நெறிக்கு பெண்க
ள் புனர்வாழ்வு மற்றும்
அபிவிருத்தி நிலையம்
நிதியுதவியையும்
ஆதரவையும்
வழங்கியிருந்தது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு,
ஒட்டுசுட்டான் ஆகிய
கல்வி வலயங்களுக்குட்பட்ட
18 பாடசாலைகளைச் சேர்ந்த
உயர்தர மாணவிகளும்
வேறு கல்வி நிலையங்களைச்
சேர்ந்த
தெரிவுசெய்யப்பட்ட
பெண்களும் இப்பயிற்சியில்
பங்கெடுத்திருந்தனர்.
சிங்கள அரசு தமிழ்ச்
சமூகத்தின்
கல்வி உரிமையை மறுத்துள்ளத
ு. வரலாற்றில் சிங்கள
தீவிர வாதிகள் எப்போதும்
தாக்கியே வந்துள்ளனர்
எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாணவர்கள்
திட்டமிட்ட முறையில்
அழிக்கப்படுவது இதுதான்
முதற்தடவையல்ல. அரசின்
முப்படைகளினதும்
வெறியாட்டத்தால்
அப்பாவித் தமிழர்கள்
பட்டபாடு வார்த்தைகளால்
எழுதிவிடமுடியாது. ஏனெனில்
அந்த வலியை பதிவுசெய்யும்
ஆற்றல் இந்த
வார்த்தைகளுக்கு இல்லை.
இரு தசாப்தங்களுக்கு மேலாக
தொடரும் போரில் பேரினவாத
அரச படைகள் பாவித்த மிகப்
பயங்கரமான விமானங்கள் பல.
அவை விடுதலைப்
புலிகளை தாக்கியதை விட
பொதுமக்களையே பலிகொண்டன.
இன்று தமிழர்
தாயகத்தை விட்டு வெளியேறி
புலத்திலுள்ளவர்களானாலும்
சரி வட,
கிழக்குக்கு வெளியே இருக்க
ும் வளர்ந்தவர்களானாலும்
சரி விமானத்
தாக்குதல்களில்
அனுபவப்பட்டவர்களாக
இருப்பார்கள். அன்று ஹெலி,
சீ.பிளேன், சியாமாச்
செட்டி, அன்ரனோவ்,
சகடை (பட்டப்பெயர்),
புக்காரா என
தொடங்கி தமிழரின்
உயிர்குடித்த விமானங்கள்
தாயகத்தின் வானில்
தலைகாட்ட முடியாத
நிலையில் `மிக்' என்றும்
`கிபிர்' என்றும்
`சுப்பசொனிக்' என்றும்
அப்பாவி தமிழரின்
உயிர்குடிக்க
அனுப்பப்படுகின்றன.
இலங்கை விமானப் படைகள்
தமிழர் தாயகத்தின்
மேற்கொண்ட கண்மூடித்தனமான
தாக்குதல்கள் ஏராளம்.
இதில் பள்ளி மாணவர்கள்,
பச்சிளம்
குழந்தைகளை வகைதொகையின்றி
பலியெடுத்த வரலாறு மிகக்
கொடியது.
நாகர்கோவில் மத்திய
பாடசாலை சிறார்களின்
படுகொலை
அன்று 1995 செப்டெம்பர் 22
ஆம்
திகதி சின்னஞ்சிறுசுகளின்
கலகலப்பான பேச்சுக்களுடன்
நாகர் கோவில் மத்திய
பாடசாலை பூஞ்சோலையாக
காணப்பட்டது. பகல் 12.30
மணியளவில் மதியநேர
இடைவேளைக்கு மணியடித்த
போது பிள்ளைகள் வெளியில்
வந்து விளையாடிக்
கொண்டிருந்தனர். பகல் 12.50
மணி...
ஆக்கிரமிப்பு படைகளின்
`புக்காரா' விமானங்கள்
குண்டுகளை மாறி மாறி கண்மூ
டித்தனமாக வீசின. எதுவும்
அறியாத பிஞ்சுகள்
மரமொன்றின்
கீழே பதுங்கிக் கொண்டனர்.
இந்த
கொலை வெறிபிடித்தவர்களின்
தாக்குதல்களால் மரத்தின்
கீழே நின்ற 25 சிறார்கள்
உடல்சிதறி அநியாயமாக
கொல்லப்பட்டனர். இந்தத்
தாக்குதலின்போது 40
அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக
ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டன
ர். 200 பேர் வரையில்
படுகாயமடைந்தனர். இதில்
கொல்லப்பட்டவர்களில் 6
வயது குழந்தை முதல் 16
வயது சிறுவன்
வரை அடங்குகின்றனர்.
இது பாடசாலை மாணவர்கள்
படையினரால்
கூண்டோடு அழிக்கப்பட்ட
மற்றுமொரு சம்பவம். இதைவிட
மாணவர்கள், குழந்தைகள்,
பெண்கள் ,வயோதிபர்களென
எதுவித
வேறுபாடுகளுமின்றி கொல்லப்
பட்ட சம்பவங்கள் ஏராளம்.
`குமுதினி' படகில்
(நெடுந்தீவுக்கும்
குறிகட்டுவானுக்குமிடையில
் போக்குவரத்தில்
ஈடுபட்டுள்ள படகு) பயணித்த
பலரை 1984 ஆம்
ஆண்டு கடற்படை வெட்டியும்
குத்தியும் கொன்றது. இதில்
6 மாத பச்சிளம் பாலகன்
துப்பாக்கியிலுள்ள
கத்தியால் கடற்படையினரால்
குத்திக்
கொலை செய்யப்பட்டான்.
மூன்று முறை அந்த
பிஞ்சு நெஞ்சில்
குத்தி கொன்ற
கடற்படை இன்றும் தமிழர்
தாயகத்திலேயே நிலை கொண்டுள
்ளது.
இவ்வாறு இலங்கை அரசின்
முப்படைகளும்
மேற்கொள்ளும்
தாக்குதல்களால் அப்பாவித்
தமிழ் மக்கள் இழந்த
உயிர்கள், உடைமைகள்
ஏராளம். ஆனால்
தமது கண்மூடித்தனமான
தாக்குதல்களை மேற்கொண்டுவி
ட்டு அதற்குப்
பொய்யான,வொப்பான
விளக்கங்களை பேரினவாதிகள்
மாத்திரமன்றி சிங்களத்துவ
ஊடகங்களும் கூறிவருகின்றன.
இதற்கு தமிழக முதல்வர்
மு.கருணாநிதி கூறியுள்ளதை ப
திலாக முன்வைக்கலாம்.
"இனவெறி - இதயமற்றோர்
நடத்திய
முல்லைத்தீவு படுகொலைக்கு
சமாதானம் சொல்வது போன்ற
சண்டாளத்தனம்
கொடுமையானது". இலங்கையில்
நடைபெறும்
அராஜகங்களுக்கு இந்த
பழமொழியும் நன்றாக
பொருந்தும் - "பேய்
ஆட்சி செய்தால் பிணம்
தின்னும் சாத்திரங்கள்"
என்பதே அது.
Subscribe to:
Posts (Atom)