Google இல் மட்டும் அல்ல Youtube போன்ற ஏனைய இணைய உலவிகளிலும் தமிழ் என்று அழைத்தால் வருவதும் இவைபோன்றுதான் உள்ளது படு கேவலமாக .அதே நேரத்தில் வேற்று மொழிகளை அழைக்கும் போது இவ்வாறு வராமல் இருபதட்கு கரணம் என்ன ? எம்மவர்கள் அதிகமாக எதனை செய்கிறர்கள இப்போது என்று புரியும் உங்களுக்கு .இதட்காகவா எம் மாவீரர்களும் ,மக்களும் தாயகத்தில் வீர வித்தானார்கள் ? சும்மா வீதியில் இறங்கி கத்தி கத்தி ஒன்றும் செய்யமுடியாது .காலபோக்கில் எதோ குட்டை நாய்கள் குரைகுதுகள் என்று போட்டு உலகம் போய்விடும் . தமிழனும் ,தமிழீழமும் ஒருங்கே விடுதலை அடைய வேண்டும் என்றால் ....! மக்கள் புரட்சியுடன் ,தமிழரின் சமூக புரட்சியும் அறிவியல் புரட்சியும் ஏற்படவேண்டும் . சாதி ,இனம் ,மொழி கடந்த சமதர்மமுள்ள தமிழீழ தனியரசே தமிழரின் தாகம் . தமிழன் என்ற ஒற்றை இனமே எங்கள் ஒருமைப்பாடு .நாம் தமிழர் .எமது தாயகம் தமிழீழ பேரரசு .அதுவே எமது இறுதி இலக்கு .தமிழீழம் உலகெங்கும் சிதறி வாழும் உலக தமிழர்களின் உரிமைத் தாயகம் .என்று உரத்து கூற முதலில் தமிழன் தமிழனாக மாறவேண்டும் .
" பொங்கும் தமிழர்களுக்கு இன்னல் விளைத்தால் ,ஆறரைக் கோடிஉறவுகளும் ,அறிக்கை விட்டு விட்டு அம்போ என்று விட்டு விடும் என்று முழங்கு சங்கே முழங்கு ."
ம்ம்ம் நம்ம தமிழனுக்கு என்னத்ததான் சொன்னாலும் எருமை மாடில பெய்யிற மழைதானே.!!
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன்