Posted by
The Voice Of Justice
at
11:26 PMThursday, April 15, 20100
comments
6வது தலைமுறையைச் சேர்ந்த 4,50,000 மலேசிய இந்திய தமிழர்களுக்கு இன்று வரை மலேசியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதற்கு தமிழக அரசு தலையிட்டு நீதி பெற்றுத் தருமா? உலகத் தமிழ் மாநாட்டில் மலேசியத் தமிழர்களின் உரிமைக்கான குரல் ஒலிக்குமா?
பேராசிரியா தீரன்
மலேசியாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தையும் தாண்டுகிறது. அதாவது, மலேசியாவின் மொத்த மக்கள் தொகையான 2 கோடியே 20 இலட்சத்தில் 8 சதவிகிதத்திற்கும் மேலான விகிதாசாரத்தை மலேசியத் தமிழ் மக்கள் பெற்றிருக்கின்றனர். உலகிலேயே அதிகளவில் இடம்பெயர்ந்து வாழும் இந்தியத் தமிழ்ச் சமுதாயம் மலேசியாவில்தான் என்பதும் உண்மையானதொன்று. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் தமிழர்கள் கயானா, தென்னாப்பிரிக்கா, மற்றும் மலேசியா போன்ற பல்வேறு ஆங்கிலேய காலனித்துவ நாடுகளுக்கு அந்நாடுகளின் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கத்தில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் கடல் கடந்து பொய் வாக்குறுதிகள் கூறி அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வழியிலே, கயானாவில் ஏறத்தாழ 3 இலட்சம் தமிழர்களும், தென்னாப்பிரிக்காவில் ஏறத்தாழ 6 இலட்சம் தமிழர்களும் மற்றும் மலேசியாவில் 18 இலட்சம் தமிழர்களும் ஆறு, ஏழு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
மலேசியாவின் பொருளாதார உயர்விற்காக அரும்பாடுபட்ட தமிழர்கள் நிலையைப் பார்த்தோமானால் அதிர்ச்சித் தரத்தக்கதாகவே அமைந்துள்ளது. மலேசியா சுதந்திரமடைந்த பொழுது தமிழ் அரசியல் தலைவர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் வாக்களித்ததுபோல் மலாய் அரசியல் தலைவர்கள் பின்னர் நடந்துகொள்ளவில்லை. தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இன்று 6வது தலைமுறையாகியும் 4,50,000 தமிழர்களின் பிறப்புரிமை மறுக்கப்பட்டுச் சொந்த நாட்டிலேயே நாடற்ற அகதிகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர் இந்திய அரசும் வழக்கம் போலவே, அன்று தொட்டு இன்று வரை பர்மாத் தமிழர்களின் உரிமைக்காக போராடாமல் அவர்களை அகதிகளாக்கியது போல், இலங்கை மலையகத் தமிழர்களின் குடியுரிமைக்காகப் போராடாமல் அவர்களை அகதிகளாக்கியது போல், மலேசியத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்காமல், மாறாக மலேசிய நாட்டுடன் பொளுளாதார ஒப்பந்தம் செய்து மலேசிய நாட்டை வாழவைப்பதை நோக்கும் போது பாரதியார் பாடிய “நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற பாடல் நினைவிற்கு வருகிறது.
1965 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமையும் சமஉரிமைகளையும் வழங்கியது. அதைத் தொடர்ந்து 45 ஆண்டுகளில் அந்நாட்டில் குடியேறியவர்களின் முதல் தலைமுறையிலிருந்து வந்த ஒரு குடியேறிய அடிமையின் மகன், அதுமட்டுமல்லாமல், கருப்பினத்திலிருந்து வந்தவருமாகிய ஒபாமா இன்று அமெரிக்காவின் தலைவருமாகியுள்ளார். அது சரித்திர ரீதியாக, சமூக மற்றும் அரசியல் ரீதியான உரிமைக்கான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றிச் சின்னமாகும். ஆனால் மலேசியாவின் தமிழர்களுக்கு, சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்று வரை, மலேசிய அரசியல் சாசனத்தில் மலேசிய சிறுபான்மையினருக்கென்று கூறப்பட்டிருந்த அடிப்படை உரிமைகளும் படிப்படியாகத், திட்டமிட்டு, மறுக்கப்பட்டு, மலேசியாவில் வாழும் பல்வேறு சமூகத்தினர்களுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுத்தி மலேசிய நாட்டை ஒரு இனரீதியான நாடாக உருவாக்கிய மலேசிய அரசின் வஞ்சகத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மலேசிய அரசியல் சாசனத்தின் பிரிவு 8ல் குடிமக்கள் அனைவருக்கும் கூறப்பட்டிருந்த சமஉரிமையானது இன்று அதாவது பூமிபுத்ரா என்று கூறப்படும் மலாய் முஸ்லீம் சமூகம் என்ற ஒரு சமூகமாகவும் மற்றொன்று பூமிபுத்ரா அல்லாதவர்களாகிய ஒரு சமூகமாகவும் இரண்டு சமூகமாக மாற்றப்பட்டு இரண்டாம் சமூகத்திற்கு முற்றிலும் அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்படுகின்றன. இப்படியான மலேசிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை அந்நாட்டின் கூட்டரசுப் பிரதேச அரசியல் சாசனத்தின் 153 பிரிவிற்கு விரோதமானதாகும். அதுமட்டுமன்றி மலாய் முஸ்லீம் அல்லாதோர், அந்நாட்டில் 5 மற்றும் 6ஆம் அல்லது கூடுதலான தலைமுறையை எட்டியிருந்தாலும்கூட அவர்களனைவரும் தொடர்ந்து குடியேறிகளாகவே மலேசிய அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்காரணமாகத்தான் இன்றைய இரண்டு பிரிவு சமூகம் சமுதாயம், மலேசிய அரசியல் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், மலேசிய கூட்டரசு பிரதேச அரசியல் சாசனத்தின் பிரிவு 11-ல் அனைத்து மக்களுக்குமான மத உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இந்த உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. இந்துக்கள் மற்றும் கிறித்துவர்களின் ஆலயங்கள் அரசாங்கத்தின் ஆதரவோடு வௌ;வேறு காரணங்கள் கூறித் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 200 இந்து கோவில்கள் அழிக்கப்பட்டிருப்பது மலேசிய அரசின் மத உரிமைகளின் மீறல்களுக்குச் சான்றுகளாகும். இதன்காரணமாக மலேசியாவின் சிறுபான்மையினர், அவர்களின் மதத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
குடியுரிமை விவகாரத்தை எடுத்துக்கொண்டால், கூட்டரசு பிரதேச அரசியல் சாசனத்தின் பிரிவு 14 க்குப் புறம்பாக சிறுபான்மையினமான தமிழ் மக்களுக்கான குடியுரிமை நிராகரிக்கப்பட்டு வருகின்றது. 5 மற்றும் ஆறாவது தலைமுறையாகிய மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழர்களில், தற்போதைய கணிப்பின்படி, ஏறக்குறைய 1,50,000 குழந்தைகளும் 3,00,000 வாக்குரிமை வயதை அடைந்தவர்களும் குடியுரிமை கிடைத்திடாமல் அவதிக்குள்ளாக்கபட்டு வருகின்றனர். குடியுரிமை கிடைத்திடாத காரணத்தினால் பிறப்புரிமைச் சான்றிதழ்களும் மறுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மலேசிய தமிழ் குழந்தைகள் பள்ளியில் சேருவதற்குத் தகுதியில்லாமல் தத்தளித்து வருகின்றனர். பலஆண்டுகளாகியும் தங்களது பிறப்புரிமையும் குடியுரிமையும் மறுக்கப்பட்ட காரணத்தினால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய விரக்தியின் காரணமாக, பல தமிழர்கள், ‘வாழ்வதைவிட சாவதே மேல்’ எனத் தற்கொலை ஒன்றே வழியெனக் கொள்கின்றனர். மலேசிய அரசாங்கம் இனவாத ரீதியில் இப்பிரச்சனையை சீர்செய்யாமல், வேண்டுமென்றே தீர்வு ஒன்றும் காணாமல், தமிழ் மக்களின் அழிவிற்கும் அடிப்படை உரிமை மீறலுக்கும் வழிவகுக்கின்றனர்.
பிஜி நாட்டில் ஹிந்தி பேசும் வம்சாவழியினர்க்குப் பிரச்சனை எனும் போது ஹரியானா முதல்வர் கொதித்தெழுந்தவுடன் மத்திய அரசு தனது இராஜாங்க உறவுகளை பிஜியுடன் துண்டித்துக்கொண்டு பிஜிக்கான இந்தியத் தூதுவரை திரும்ப அழைத்துக்கொண்டது. அதுபோன்று கென்யா நாட்டில் குஜராத்தியர்களுக்கெதிரானக் கலவரத்தை கண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு குறராத்தியரும் தனது மாநிலத்தில் வந்து கௌரவமாக வாழலாம் என்றும் அதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வேன் என்று சூளுரைத்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வருவதற்கு இந்திய பாஸ்போர்ட் குஜராத்திகளுக்குத் தேவையில்லை என்று பிரகடனப்படுத்தியதைப் பார்த்துவிட்டு, மத்தியஅரசு, கென்யா அரசாங்கத்திற்குத் தனது தூதுவர் மூலம் காட்டமான முகத்தைக் காட்டியது.
கென்யா அரசாங்கம் மிரண்டுபோய் நாடு முழுவதும் உள்ள குஜராத்தியர்களுக்கும் அவர்களது சொத்துகளுக்கும் கடைகளுக்கும் இராணுவப் பாதுகாப்புக் கொடுத்து, கலவரக்காரர்களான தன்மக்களையே சுட்டுபொசுக்கி கலவரத்தை நொடிப் பொழுதில் தன்கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது. மலையாளி மக்கள் இலட்சக்கணக்கில் வாழும் மத்திய தரைக்கடல் வளைகுடா பகுதியில் ஈராக் போரின்போது அல்லலுற்ற மலையாளிகளைக் காப்பதற்கு கேரள முதல்வராக இருந்த அந்தோனியின் கூக்குரலுக்கு இணங்க இந்திய மத்திய அரசு தனது ஏர்-இந்தியா விமானங்கள் அனைத்தையும் வளைகுடா பகுதிக்கு திருப்பி இலட்சக்கணக்கான மலையாளிகளை இந்தியாவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்த்தது. இப்படியாக இந்தியாவின் மற்றைய தேசிய இனங்களின் பிரச்சனைகளையெல்லாம் நிமிட நேரத்தில் சாதுர்யமாக நின்று செயல்படும் மத்திய அரசு, தமிழினத்திற்கு நேரும் பிரச்சனைகளைத் தன்பிரச்சனையாகக் கொள்ளாமல் மாற்றாந்தாய் நோக்கிலேயே பார்ப்பது ஏன் என்று புரியவில்லை.
சென்ற வருடம் ஈழத்தின் நான்காம் கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில், சிங்களப் பேரினவாத அரசினால், மூன்று நாட்களில் 50,000 அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழகமே கொதித்தெழுந்தது. 16 தமிழர்கள் தங்களது உடலையே எரித்துக் கொண்டு தமிழினத்தின் மீதான போரை நிறுத்த இந்தியா முன்வர வேண்டும் என கோரிக்கைவிடுத்து தங்கள் உயிரை மாய்த்தனர். ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு!’ என்று வசனம் பேசும் தாய் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் சிலர் வாய்மூடி மெனமாக இருந்தனர்.
மத்திய அரசு, தமிழ் மக்களின் போராட்டத்தைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல், இலங்கை அரசுக்கு அனைத்து விதத்திலேயும் உதவியாக இருந்து தமிழினப் படுகொலையில் பங்கெடுத்துக் கொண்டது என்பது வரலாற்று ரீதியான தவறு என்பதை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை. பெரு நாட்டின் அதிபர் புஜி மோரியின் வரலாற்றைப்போல், இங்கு இந்தியாவில், எதிர்காலத்தில், நடக்கும்போது, அன்றைய மத்திய அரசு, இந்த வரலாற்றுத் தவறை புரிந்துக்கொள்ளும். தமிழினப் படுகொலையைக் கண்டு உலகமெல்லாம் அரண்டு மிரண்டு போய், தாங்கள் செய்தது தவறு என்று புரிந்துக் கொண்டு இலங்கை அரசுமீது போர்க்குற்றத்தைக் கொண்டு வரப் போராடி வருகின்றன.
ஆனால், நமது இந்திய மத்திய அரசு தன் தவறை மறைப்பதற்குத் தவறுக்கு மேல் தவறு செய்வதுபோல், இலங்கை அரசுக்கு உதவி வருவதைத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். போர்க்குற்றவாளி இராஜபக்சேவோடு சேர்ந்து உறவாடியவர்கள் அனைவருமே போர்க்குற்றவாளிகள் என்பதைக் காலம் நிருபிக்கும். இந்திய வெளியுறவுக் கொள்கையை, தனிமனிதருக்காக, தவறுதலாக வழிநடத்திய அனைவருமே வருந்தவேண்டிய சூழ்நிலை உருவாகும். அவர்கள் நம்பும் கடவுள் அவர்களை மன்னிக்கலாம். ஆனால் வரலாறு மன்னிக்காது. தவறான வெளியுறவுக் கொள்கையால் அருணாச்சலப் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த சீனாவை, இன்று இலங்கைத் தீவினில் அம்பாந்தோட்டையில், கச்சத்தீவில், தமிழகத்தின் 18 மைல் தொலைவில், நிலை கொள்ள வைத்தது என்பது இந்திய வெளியுறவுத் துறையின் பெரும் வரலாற்றுப் பிழை என்பதைவிட வரலாற்றுத் துரோகமாகும். இத்துரோகத்தை இழைத்த அனைவரும், எத்துனை ஆண்டுகளானாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! இந்திய இறையாண்மைக்கு இழைத்த துரோகம் என்ற விதத்திலே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஈழத்தில் இருந்து புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள், மேற்கூறியவாறு இந்தியாவும் அதனுடன் சேர்ந்து மற்றைய நாடுகளும் தமக்கு இழைத்த துரோகத்தையும் அநீதிகளையும் நிவர்த்திச் செய்யும் பொருட்டு, உலகம் முழுவதும் 1976-ல் கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம், தனித் தமிழீழமே, தமக்கு ஒரே அரசியல் தீர்வு என மீள்வாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தினர். ஐரோப்பிய நாடுகளில் நடந்த மீள்வாக்கெடுப்பில், அது வெற்றியடைய வேண்டி, தமிழ் மக்களிடையே, நான் பரப்புரை மேற்கொண்டதை, எனது வாழ்நாளில் பெருமையானதொரு நிகழ்வாகக் கருதுகிறேன். 7 கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாட்டிலும், இப்படியானதொரு வாக்கெடுப்பை நடத்தித் தமிழ் மக்களின் விருப்பத்தை உலகிற்கு இந்த நேரத்தில் எடுத்துக்காட்ட வேண்டியது தமிழக முதல்வரின் தலையாய கடமையாகும்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல சிங்கள மருத்துவர் டாக்டர் பிரெயின் செனிவரத்னே அவர்கள் கூறிய வரியை இங்கு அனைத்து தமிழர்களுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். “உலகத் தமிழர்களே தோல்வி கண்டோம் எனத் துவள வேண்டாம்! ஆயுதப் போர் முடிவடைந்திருக்கலாம்! ஆனால் உண்மையான யுத்தம் இப்பொழுதான் ஆரம்பித்திருக்கிறது. அது ஜனநாயக யுத்தம். சமீபத்தில் உலகெங்கும் ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் நடத்தி முடித்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீள்வாக்கெடுப்பின் அமோக வெற்றி, வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியதொன்றாகும். அனைத்துத் தமிழர்களும் அந்த ஜனநாயகப் போரிலே ஈடுபடுங்கள்! ஈடுபடுங்கள்!”
மலேசியத் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மலேசிய பேரினவாத அரசினால் மறுக்கப்படுவதை அறிந்தும் அதைக் கண்டிப்பதற்குப் பதில் இந்தியா, மலேசிய அரசிற்குப் பொருளாதார ரீதியாகப் பல்வேறு உதவிகளைச் செய்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 70 கணிணி பொறியியல் வல்லுநர்களை மலேசியக் காவல்துறையினர் அவமானப்படுத்தியபோது, வெகுண்டெழுந்த சந்திரபாபு நாயுடு அப்போதைய மத்திய அரசின் துணையோடு மலேசிய அரசாங்கத்தை ஆட்டங்கொள்ள வைத்தார் என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். அதன் பலனாக, மலேசியா 65,000 கோடி ரூபாய்க்கான வர்த்தக இழப்பை எதிர்கொள்ள நேர்ந்தது மட்டுமல்லாமல் இன்றுவரை இத்தியாவிற்கான பாமாயில் வர்த்தகத்தை இந்தோனேசியாவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கும் அவலத்தைச் சந்திக்க நேர்ந்ததை மலேசியா மறந்திருக்காது என்பதை நாமறிவோம். அப்படியாக நாமும் தமிழகத்திலே குரல் எழுப்பும் நிலையில், மலேசிய அரசாங்கம் மலேசியத் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு முன்வரும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் வழக்குரைஞர் உதயகுமார் மற்றும் அவரது சகோதரர் வழக்குரைஞர் வேதமூர்த்தி அவர்களும் பல்வேறு இன்னல்களுக்கிடையே போராடி வருகின்றனர். உதயகுமார் இரண்டு வருடங்களாக கடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டார்;. அவரது சகோதரர் வேதமூர்த்தி பல வருடங்களாக மலேசியாவிற்குள் செல்ல முடியாமல் வெளிநாடுகளிலேயே வசித்து வருகின்றார். வேதமூர்த்தியை நமது தமிழக முதல்வர் சந்தித்து மலேசியத் தமிழ் மக்கள் சந்தித்து வரும் அவலங்களைக் கேட்டறிந்ததை நாமறிவோம். மலேசியத் தூதுவராக வந்திருந்த டத்தோ சாமிவேலுவை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு வேதமூர்த்தியைத் தமிழக முதல்வர் சந்தித்தது இந்திய-மலேசிய இராஜாங்க ரீதியில் பெரிதாகப் பேசப்பட்டது.
ஆனால், அதற்கடுத்து எந்தவொரு நிலையையும் தமிழக முதல்வர் எடுக்காததால், மலேசிய அரசாங்கம் மீண்டும் தமிழர்களுக்கெதிரான நிலையை எடுத்து வருவதைத் தமிழக முதல்வர் புரிந்துகொண்டு அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உலகத் தமிழ் மாநாட்டில் மலேசியத் தமிழர்களுக்கான உரிமைகளுக்கான குரல் ஒலிக்கவேண்டும். மலேசிய அரசாங்கம் அதைச் செவி மடுக்காத வேளையில் பொருளாதார ரீதியாக மலேசிய அரசை ஒடுக்குவதற்கு மத்திய அரசைப் பயன்படுத்த வேண்டும் என்பதே உலகத் தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்களின் கோரிக்கையுமாகும். மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கை என்று அறிவித்த தமிழக முதல்வர் கருணாநிதி, இனியாவது தனது நிலையைத்; திருத்திக்கொள்ள வேண்டும். உலகத் தமிழ் மாநாட்டின் அரங்கத்தில் கம்பனுக்குப் பெயர் சூட்டுவதும் கண்ணகிக்கு மாலை சூட்டுவதும் இன்று பொருத்தமானதன்று.
ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்கு எதிராக உலகமெல்லாம் ஆதரவு பெருகிவரும் சூழலில் தமிழக அரசு, ஹரியானாவைப் போல, குஜராத்தைப் போல, தன் தமிழின மக்களுக்காக, தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் அதில் பங்கேற்கும் உலகத் தமிழ் அறிஞர்களும், உலகத் தமிழ் மாநாட்டில் தமிழினப் படுகொலைக்காக நீதி கோர வேண்டும், என உலகத் தமிழர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். தான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் பொழுது, அதிபர் பில் கிளின்டன் அவர்கள் தான் முதலாவதாகப் பெருமைப்படுவது என்னவெனில் தான் ஒரு அய்ரீஷ் (ஐசiளா) இனத்தவன் என்று பகிங்கரமாகக் கூறியதோடு மட்டுமல்லாமல், அய்ரீஷ் பிரச்சனையைத் தனது ஆட்சிக்காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வந்தார். அதுபோலவே, தமிழக முதல்வரும் ஈழத்தமிழினத்தின் இனப்படுகொலைக்கு உலகத் தமிழ் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரனைக்கு மேற்குலக நாடுகளுடன் இணைந்து ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். இல்லையேல் உலகத் தமிழ் மாநாட்டின் நோக்கம் வரலாற்றில்; கேள்விக்குறியாகிவிடும்.
மலேசியத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அதற்காக மனித உரிமைக் கட்சியின் தலைவர் பொ.உதயகுமார் நடத்தும் இணையத்தளம் http://www.humanrightspartymalaysia.com/ என்ற தளத்தில் மலேசியத் தமிழர்கள் படும் அவலத்தை அறிந்துகொள்ளலாம். அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானதொன்று.
“உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்! தமிழர்க்கெதிரான மனித உரிமை மீறலை ஒடுக்க ஒன்றுபடுவோம்!!”
" இன்றைக்கு 200-ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்றபெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூறமுடியுமா?
கூறமுடியுமானால் அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஓர் ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றி யறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! "
- [குடிஅரசு, 08.05.1948]= பெரியார்
" கண்ணுக்கு முன்னே நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பவன் .என்னை சேர்ந்தவன் " .
" சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் "

தற்கால அரசியல் பார்வையும் , எமது மக்களுக்கான சரியான தளத்தினை உரிய முறையால் வெளிகொனற எம்மால் தனிபட்ட முறையில் ஆதாரங்களுடன் விளக்க முற்படும் எதிர்கால அரசியல் மற்றும் சமூக விழிபுணர்சி ஆய்வு செய்தித் தளம் .
தமிழனும் ,தமிழீழமும் ஒருங்கே விடுதலை அடைய வேண்டும் என்றால் ....! மக்கள் புரட்சியுடன் ,தமிழரின் சமூக புரட்சியும்,அறிவியல் புரட்சியும்ஏற்படவேண்டும் . சாதி ,இனம் ,மொழி கடந்த சமதர்மமுள்ள தமிழீழ தனியரசே தமிழரின் தாகம் . தமிழன் என்ற ஒற்றை இனமே எங்கள் ஒருமைப்பாடு .நாம் தமிழர் .எமது தாயகம் தமிழீழ பேரரசு .அதுவே எமது இறுதி இலக்கு .தமிழீழம் உலகெங்கும் சிதறி வாழும் உலக தமிழர்களின் உரிமைத் தாயகம்
----
Our Tamil National Leader
எந்த ஒரு அவதாரமும் ,தன் அவதார நோக்கம் நிறைவேறாமல் , தன் இருப்பிடம் திரும்பாது .எம் அண்ணன் வருவரை காத்திருக்காது இன்றே தமிழா ஒன்றுபடு .மக்கள் புரட்சி வெடிக்கட்டும். இப்பாரினில் தமிழனுக்கு ஒரு நாடு விடியட்டும் .தமிழரின் தாகம் ஓயாது ஐநாவில் வேங்கை கொடி பறக்கும் வரை .< = இது புலி பதுங்கும் காலம் = >
History Of Tamil Eelam Freedom Fight
The island of Sri Lanka (known as Ceylon until the promulga tion of the new Republican Constitution in 1972) is the historical homeland of two ancient civilizations, of two distinct ethno-nation al formations with different languages, traditions, cultures, territo ries and histories. The history of the Tamils in the island dates back to pre-historical times. When the ancestors of the Sinhala people arrived in the island with their legendary Prince Vijaya from the `city of Sinhapura in Bengal' in the 6th century BC they encoun tered ancient Dravidian (Tamil) settlements. Even the Sinhala his torical chronicles - Dipavamsa and Mahavamsa - document the existence of Dravidian kingdoms of Nagas and Yakkas before the advent of Sinhala settlers in the island. In an attempt to distort the authentic history of the original settlers, the Buddhist monks, who wrote the historical chronicles, depict the ancient Tamils as 'non humans' as `demons possessing super-human powers'. Though the question of original settlement is obscured by legends and mytholo gies, modem scholars hold the view that the Tamils were indis putably the earliest settlers. Because of the geographical proximity of southern India to the island, it is highly probable that the Dravidian Tamils were the original inhabitants before the sea land ing of Prince Vijaya and his crew from northern India.
The Buddhist historical chronicles record the turbulent histori cal past of the island from 6th century BC, the history of great wars between Tamil and Sinhala kings, of invasions from southern Indian Tamil empires, of violent struggles for supremacy between Tamil and Sinhala kingdoms. The island was ruled by Sinhalese kings and by Tamil kings at times and the intermittent wars com pelled the Sinhala kings to move their capital southwards. From the 13th century onwards, until the advent of foreign colonialism, the Tamils lived as a stable national formation in their own kingdom, ruled by their own kings, within a specified territory of their tradi tional homelands embracing the northern and eastern provinces.
Marco Polo once described Sri Lanka as the island paradise of the earth. The British colonialists called it `the pearl of the Indian ocean'. Separated from the southern coast of India by only a twen ty-two mile stretch of water, the island has a territorial area of 25,332 square miles. For centuries before colonial penetration, the island had a traditional self-sustaining economy with a reputation of being the granary of the East. The mode of economic production in the pre-colonial epoch was feudal in character. Structured with in the feudal mode, the economic organisation of the Tamil nation had a unique set of relations of production characterised by caste stratification with its hierarchy of functions. The extensive hydraulic agrarian system with its network of tanks and canals for which the mediaeval Ceylon was famous, had fallen out of use and was decaying and disappearing under the thick jungles in the north as well as in the north central provinces. The Sinhalese feudal aris tocracy, by this time, had moved to the central highlands and estab lished Kandy as the capital.
When the Portuguese first landed on the island in the beginning of the 16th century, they found two ancient kingdoms, the Tamils in the north-eastern region and the Sinhalese in the south, two dis tinct communities of people with different cultures constituting themselves as separate nations ruled by their own kings with sov ereign state structures. The Portuguese entered into treaties and then fought battles and finally in the battle of 1619 they conquered the Tamil kingdom and hanged the Tamil king Sankili Kumaran. Yet the Portuguese and the Dutch, who came after them, governed the Tamil nation as a separate kingdom, recognising the integrity of the Tamil homeland and the ethnic identity of the Tamil people. In 1796 the British colonial empire took control of the island from the Dutch and in 1833 imposed a unified state structure amalgama ting the two national formations irrespective of the ethnic differ ences. Thus foreign colonialism laid the foundation for the present national conflict. Though the British, for administrative purposes, created a unitary state, they recognised that the island had been the homeland of two separate nations. In 1799 Sir Hugh Cleghorn, the first Colonial Secretary observed in the well known 'Cleghorn Minute', `two different nations, from very ancient period have divided between them the possessions of the island: the Sinhalese inhabiting the interior in its southern and western parts from the river Wallouve to that of Chillow, and the Malabars (the Tamils) who possess the northern and eastern districts. These two nations, differ entirely in their religion, language and manners.' Though the Sinhalese and the Tamils have an ancient past with deep historical roots buried beyond the Christian era and possess elements of distinct nations, the island of Sri Lanka, in the course of history, developed a heterogeneous culture. There are other eth nic groups living in the island, of which the Muslims and the plan tation Tamils constitute themselves as significant communities of people with distinct cultural identities.
The Sri Lankan Muslims, whose origins can be traced back to the 10th century, arrived in the island as traders from Arabia. The Muslims adopted the Tamil language as their mother tongue and settled down predominately in the eastern region and in the southern districts. Though they embraced Tamil language and shared a common economic existence with the Tamils as a peasant community in the east, it is their religion, Islam, which provides them with the consciousness of collective cultural identity as a distinct ethnic group.
Our Universal Real Hero
உலக அரசுகள் விஞ்ஞான முறையில் கையாளும்மனித உரிமை மீறல்கள்