புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மாற்றான் குடியல்ல; உங்கள் இரத்த உறவுகளே
புலம்பெயரந்தவர்கள் ஒன்றும் கூண்டோடு குடிபெயர்ந்தவர்கள் அல்ல. சராசரி ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனுக்கும் பாதிக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஈழத்திலுண்டு. அதனால் தான் அவன் உணர்வுகொண்டு வீதிகளில் இறங்கிப் போராடுகிறான். புலத்தில் இருந்து கொண்டு வாக்குப் போடுவர்களை திசை திருப்பி தமிழர் ஒற்றுமைகளைக் குலைக்கிறோம் என்பது அபத்தம். அங்குள்ளவர்களுக்குத் தெரியும் யாருக்கு வாக்குப் போட வேண்டுமென்று. எமது உறவுகளுக்கு எமது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். சிங்களத்தின் காலை நக்கிப் பிழைக்க நினைக்கும் ஒரு சிறிய கூட்டம் தான் வெறும் அச்சத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் புலம்பெயர் சமூகம் மீது ஏவப் பார்க்கின்றது. இதற்காக நாங்காள் வாளா இருக்க நாம் ஒன்றும் உணர்வற்றவர்களல்ல. தொடர்ந்தும் எம்மின விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைப்போம்.
புலம்பெயர்ந்தவங்களால் தான் white van கடத்தல், கொலை, கற்பழிப்பு எல்லாம் சிங்களவங்க செய்றாங்க. சிங்களவங்கள் நல்லவங்க; அவர்கள் காலை நக்கினால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்திடும்... முடியலப்பா.... முடியல... சில நக்கிப்பிழைக்கும் நாய்களின் தொல்லைகளைக் கேட்க. புலம்பெயர்ந்த சமூகம் உயிரையும், உணர்வையும், உழைப்பையும் கொடுத்தள்ள சமூகம். தமிழின விடிவுக்குக் குரல் கொடுக்க சகல உரிமைகளும் எங்களுக்குண்டு.
எங்கள் சராசரி குடும்பங்களில் 2/3 பேர் ஈழத்தில் இன்றும் உள்ளனர். ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனுக்கும் பாதிக்கு மேற்பட்ட உறவுகள் ஈழத்தில் வாழ்கிறார்கள். புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளே. நாளை எம்மினத்திற்குத் துயரென்றால் எந்த இடர்களுக்கும் மத்தியில் வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம். இங்குள்ள காவற்துறைகளிடம் அடி வாங்கியிருக்கிறோம், இங்குள்ள மக்கள் நாம் விதியில் இறங்கியதால் வந்த அசெளகரியங்களால் எம்மீது காறி உமிழ்ந்துள்ளனர், உயிரைக் கொடுத்துள்ளோம், உணர்வையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம், தொடர் போராட்டத்தால் மாணவர்கள் ஒருவருடக் கல்வியை இழந்துள்ளார்கள். புலம்பெயர்ந்தவன் எல்லாம் நிம்மதியாக ஏக, போக வாழ்வு வாழ்கிறான் என்று நினைக்க வேண்டாம். நாமும் உங்கள் உறவுகளே.
தமக்கான ஆயுத பலத்தையும், தம் பாதுகாவலர்களையும் இழந்த ஈழத் தமிழர்கள் வாய்திறந்து பேச முடியாத நிலையில் மீண்டும் ஆயுத முனையில் அடிமைப்படுதத்தப் பட்டுள்ளார்கள்.ஆயுத பலம் சிதைக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கான போராடும் சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் முக்கியத்துவம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது ஈழத் தமிழர்களை மீண்டும் அடிமை நிலையில் வைத்திருக்க எண்ணும் சிங்கள அரசுக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது. எந்த அழுத்தங்களுக்கும் உட்படாத தமிழ்ச் சமூகம் ஒன்று புலம்பெயர் நாடுகளில் பலம் பெற்று வருவது பல அதிகார மையங்களுக்கும் அச்சத்தைக் கொடுப்பதாகவே உள்ளது. எம் தேசம் விடியும் வரை நாம் ஓயோம்.
தமிழின விடிவிற்காகவும் வளர்ச்சிக்காகவும் வாருங்கள் இணைவோம்; ஒன்றுபட்டு தமிழின விடிவுக்காக உழைப்போம்.