இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே ......! ஆதாரம் தென் இலங்கையில் .
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமகாராம
பகுதியில் கி.மு 200 ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அப்பிரதேசத்தில் தொல்பொருளாராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஜேர்மனிய ஆராய்ச்சியாளர் குழுவினர் இந்த எழுத்துக்களைக் கண்டு பிடித்தனர்.
இத்தொல்பொருளாய்வாளர் குழுவைச் சேர்ந்த ஐ.மகாதேவன் இந்த எழுத்துக்களைக் கண்டு பிடித்த பெருமையை பெறுகின்றார்.
தென்னாசியாவின் மிகப் பழைய மொழிகளாக பிராமியும், தமிழுமே உள்ளன ஆனால் சிங்கள மொழி 08 ஆம் 09 ஆம் நூற்றாண்டுக்கு உரியது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸமகாராம பிரதேசத்தில் தமிழ் வர்த்தகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்கட்டி உள்ளார்கள்.
திஸ்ஸமகாராம பிரதேசம் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான கதிர்காமத்துக்கு அருகில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மீள்பதிவு : அக்கினிபுத்திரன்
Subscribe to:
Posts (Atom)