பிரெஞ்ச் வாழ் தமிழர்களுக்கு நன்றி
உலக தமிழ் மக்களுக்கு நன்றி
வீரநடை போட்டு சற்றும் தளராத கம்பீரத்தில்
ஈழத்திற்கான நீதியை பெற்றே திரும்பும் தீரத்தை
நமக்கெல்லாம் போதிக்க நடை பயணம் செய்து
விடுதலைக்கென வலம் வரும் சிவனந்தனுக்கு நன்றி!
அவரோடுன் நடைகொள்ளும் பிற உறவுகளுக்கும் நன்றி!
ஒருவன் எரிந்து காட்டினான்;
ஒருவன் நடந்து காட்டுகிறான்!
நாம் தான் அமைதியாக பார்த்து மட்டுமே
நம்மை யார் என்று காட்டுகிறோம்,
நம்மை எனில்; என்னை!
போகட்டும் வருத்தமில்லை -
நேற்றைக்கு முன் தினம் பார்த்தவன்;
நேற்று எரிந்து காட்டினான்.
நேற்றினை பார்த்தவன்;
இன்று நடந்து காட்டுகிறான்.
இன்றினை காண்பவர்;
நாளை எதனையும் செய்யலாம்.
விழிப்புணர்வென்பது உணர்ந்து வருவது தானே;
வரட்டும் வரட்டும்!!
வித்யாசாகர்