தமிழே நீ வாழ்க.....!!!
தமிழே நீ வாழ்க!!
அறத்துடன் மறம் கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே
மறம் காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து போனாலும்
என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில் உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால் பரப்பிடுவேன்
உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும் தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப வேண்டும்
மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே மண்ணிலே
அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.
வரிகள் சேர்த்தவர் - கனி
பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
அறத்துடன் மறம் கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே
மறம் காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து போனாலும்
என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில் உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால் பரப்பிடுவேன்
உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும் தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப வேண்டும்
மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே மண்ணிலே
அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.
வரிகள் சேர்த்தவர் - கனி
பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம்-ஓவியக்கல்லூரி மாணவர் சசிக்குமார்
“முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் மறக்கக் கூடாது” என கடிதமொன்றை எழுதிவிட்டு சென்னை நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவனொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை, எழும்பூர் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்றுவந்த மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த மாணவராண சசிக்குமார் என்பவர், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள சென்னை பொலிஸார், தற்கொலை செய்துகொண்ட மாணவனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும். உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும். மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.
தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.
நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் .
நேசிக்கிறேன்.” என்று அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
சசிக்குமாரின் மரணம் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் சென்னைக்கு விரைந்து வருகின்றார்கள்.சசிக்குமாரின் மரணத்தால் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தம்பி சசிகுமார்
உன் கழுத்துக்கு சுருக்கிட்டது
உன் கைகள் அல்ல .......
எம் இனத்தை கொன்றொழித்த
சிங்கள வெறியர்களின் கைகள் ...
சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்த
வல்லரசுகளின் கைகள் .....
முள்ளி வாய்கால் பேரவலத்துக்கு பின்னும்
கைகட்டி மெளனமாக நின்றவர்களின் கைகள் ....
எஞ்சி நிற்கும் போராளிகளை காட்டி கொடுக்கும்
இன துரோகிகளின் கைகள் ....
உதடுகள் மனிதநேயம் பேச உள்ளத்தால்
அது இல்லாதவர்களின் கைகள் .....
தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்தி
தமிழனுக்கு பாதகம் செய்பவர்களின் கைகள் ....
ஆண்ட பரம்பரையை அடிமைகளாக்கி
பசிக்கு ஏந்த வைத்த கைகள் ....
வீடின்றி நிலமின்றி சொந்த மண்ணில்
பராரிகளாய் நிற்க வைத்த கைகள் .....
கவலை படாமல் செல்லடா வீர வித்தே
நாளைய ஈழம் எங்கள் கைகளில் ..........
சிபிசந்தர்
திரைப்பட இயக்குனர்
News Coordinate Link : http://www.rste.org/உயிர்க்கொடை.html
மீள்பதிவு : கருவேங்கை மறவன்
தம்பி சசிகுமார்
உன் கழுத்துக்கு சுருக்கிட்டது
உன் கைகள் அல்ல .......
எம் இனத்தை கொன்றொழித்த
சிங்கள வெறியர்களின் கைகள் ...
சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்த
வல்லரசுகளின் கைகள் .....
முள்ளி வாய்கால் பேரவலத்துக்கு பின்னும்
கைகட்டி மெளனமாக நின்றவர்களின் கைகள் ....
எஞ்சி நிற்கும் போராளிகளை காட்டி கொடுக்கும்
இன துரோகிகளின் கைகள் ....
உதடுகள் மனிதநேயம் பேச உள்ளத்தால்
அது இல்லாதவர்களின் கைகள் .....
தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்தி
தமிழனுக்கு பாதகம் செய்பவர்களின் கைகள் ....
ஆண்ட பரம்பரையை அடிமைகளாக்கி
பசிக்கு ஏந்த வைத்த கைகள் ....
வீடின்றி நிலமின்றி சொந்த மண்ணில்
பராரிகளாய் நிற்க வைத்த கைகள் .....
கவலை படாமல் செல்லடா வீர வித்தே
நாளைய ஈழம் எங்கள் கைகளில் ..........
சிபிசந்தர்
திரைப்பட இயக்குனர்
News Coordinate Link : http://www.rste.org/உயிர்க்கொடை.html
மீள்பதிவு : கருவேங்கை மறவன்
Subscribe to:
Posts (Atom)