இங்கே சிங்க தேசத்தில் ஆட்டங்களும் பாட்டங்களுக்கும் குறைவே இல்லை. ஆட்டம் பாட்டம் நடந்தால் தான் குடிமக்கள் வாழலாம் என்ற நிலையில் குடிகளும் அதையே விரும்பிநின்றது. திருவிழா காலம் ஆதலால் வேட்டை ராஜாக்களும் பட்டை அணிந்து பவ்வியமாக கோவில் வந்து சேர்ந்தார்கள். சிங்க தேசத்து அரண்மனையில் அதிய மலை ஆசியுடன் நரிகள் புலிகள் ஆகின
புலிகள் நரிகள் ஆக்கப்பட்டன.
புலிகள் ஆகிய நரிகள் பசி எடுக்க ஊளை இட்டு தன்னை காட்டி கொடுத்துவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. பசிகொண்டு நின்ற முயல்கள்
புலி தேசத்தை மறந்தோ புரிந்து கொள்ளாமலோ நரிகளிடம் ஏமாந்து கொள்கின்றதே உண்மை. பசி காக்க நரியிடம் ஏமார்ந்த முயல்கள் வாழ்ந்த வளை இல்லாது போக கடல் கடந்து உயிர் காக்க ஓடலாம்
இல்லையேல் புலித்தேவன் தான் ஒரே வழி என்று கூக்குரல் இடவும் கூடும். இல்லையேல் முயல் முயலாக இல்லாது நரியாக மாறி இறுதியில் சிங்கமாக தான் மாற வேண்டும். இதுவே சிங்கதேச ராஜாவின் தந்திரமும் ஆகும்.
இதைத் அறியா நரியாரும் தனக்குத் தான் தந்திரம் தெரியும் என்று எண்ணி நின்றது. பாவம் நரியார் இறுதியில் முயல்களால் அடித்திகலைக்கப்பட்டதே உண்மை ஆனது. முயல்கள் மீண்டும் கூடி புலித்தேவனை வேண்டி நிற்ப்பார்கள். அவ்வேளை புலித்தேவன் வந்து புலி தேசம் மீட்டு தருவாரா இல்லை
முயல்கள் கடல் கடந்து அனாதியாகி நிற்கவேண்டியது தானா?
0 comments:
Post a Comment