மக்களின் இறுதி ஆணையும் ,முடிவும்
எம் பாசத்துக்கு உரிய தமிழீழ மக்களே ...!. எமது உரிமை போரடமானது பல சதாபதங்களை ,இழப்புகளை,துரோகங் களை கடந்து இன்று மிகவும் உலகளாவிய ரீதியில் பெரும் ஆலவிருசமாக விரிவடைந்து உலகமே வியட்கும் அளவிற்று விஸ்வருபம் எடுத்து வருகிறது .இதட்குக் முழுக்காரணமும் எமது தேசிய தலைமயின் உறுதியான எந்த விட்டுகொடுபுகளும் அற்ற கொள்கையும் ,அந்த கொள்கைக்கு முழுமையாக தலைவணங்கி அந்த தலைமயின் பின்னால் ஓரணியாக எழுச்சியாக பயணிக்கும் எமது புலம் பெயர் உறவுகளும் ,எமது தலைமையின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக சரியாக உணர்ந்து பௌதறிவு சிந்தனையுடன் மிகத்தெளிவாக எதிரியின் கோட்டைக்குள் இருந்து கொண்டு போராடிவரும் எமது தாயாக உறவுகளின் உறுதி தன்மையே மிகபெரிய கரணம் .இதட்கு மிகமிக பொருத்தமான இன்றைய இறுதி சான்று நடந்து முடிந்த இந்த பாராளுமன்ற தேர்தலே ஆகும் .
எந்த அடிப்படை உரிமைக் கொள்கைகளைக் கொண்ட தமிழீழ விடிவே ஒரே தீர்வு என்ற ஜனநாயகப் போராடத்தை தந்தை செல்வா அவர்கள் முன்னெடுக்கும் போது எமது மக்கள் ஒன்று திரண்டு ஆதரித்து ஆணை கொடுத்தார்களோ ....!, எந்த ஒரு விட்டு கொடுப்புகளும் இல்லாது எந்த கொள்கையில் தமது ஆயுதங்களை தாமாகவே மெளனிக்கும் வரை ஆயுதபோரடத்தையும் ,அரசியல் நகர்வையும் முனெடுத்த தமிழீழ விடுதலை புலிகள் முன்னால் அணி திரண்டார்களோ அதேகொள்கையிலும் ,அதே தலைமையிலும் மக்கள் இன்றுவரை மிகத்தெளிவாக இருக்கிறார்கள் .மிகத்தெளிவாக தமது உண்மையான தலைமை எது என்பதை மீண்டும் ஒருமுறை உலக்கும் ,ராஜதந்திரம் என்று பகிரங்கமாக சொல்லி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைமைகளுக்கு " எப்படி இருக்கிறது எமது இராஜதந்திரம் ...! "என மிகத்தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள் எமது தாயாக உறவுகள் அரசியல் என்ற தளத்தில் இருந்துகொண்டு தமது தலைமையின் கொள்கைவழியில் .
தமிழ் மக்களின் முழுமையான ஆணையைப் பெற்று ஆயுத ரீதியாகவும் ,அரசியல் ரீதியாகவும் போராடி உலகம் வியந்து நின்று அழிக்க முற்பட்ட ஒட்டுமொத்த உலகத்தமிழ் இனத்தின் ஒரே தேசிய இராணுவமே எமது தமிழீழ விடுதலை புலிகள் .அவர்களின் தலைமையினால் மிகவும் மதினுட்பமாக எதிரியின் கோட்டைக்குள் விடப்பட்ட மிகவும் பலம்பொருந்தி இருந்த அரசியல் மற்றும் அறிவியல் ஞானம் பெற்ற அமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு .அவர்களுக்கு அன்று தொடக்கம் இன்று வரை க்கும் மக்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் வாக்கு என்னும் தமக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு உரிமை முலமாக ஆணை வழங்கி வருவது அந்த அமைப்பை உருவாக்கிய தமது தேசியத்தலைமை மீதான முழுமையான நம்பிக்கையே அன்றி வேறு எந்த காரணமும் இருக்கவே முடியாது.அது யாவரும் அறிந்த உண்மை .
இந்த தமிழ் தேசிய கூடமைப்பு விடுதலை புலிகள் களத்தில் இருக்கும் வரை தமது அடிபடைகொள்கையில் இருந்து சிறிதும் விலகாது செயல் பட்டுவந்தது உண்மையே .ஆனால் எப்பொழுது விடுதலைபுலிகளின் ஆயுதபோராட்டம் முற்றாக முடிகபட்ட மாயாத் தோற்றம் ஏற்பட்டதோ அன்றில் இருந்து இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அடிபடைகொள்கையில் இருந்து விலகுவது போன்ற தோற்றம் இன்றுவரை காட்டிவருகிறது .அதனை உணராது மக்களை தடுபதட்காக அல்லது உண்மையாக தமது அரசியல் நகர்வை சரிவரச் செய்வதட்க்கோ மக்கள் முன் தனது கொள்கையை இராஜதந்திர நகர்வு என்பதை எடுத்து உரைத்துவருகிறது .இது ஒரு புதிய குழப்பமே ...!.
அரசியல் போராட்டமும் ,ஆயுத போராட்டமும் இரண்டும் சற்று வேறு வேறு பட்டவையே .ஆயுத போராடமனது தனியே உறுதியான ஒரு கொள்கையின் படி ஒரேவழியில் பயணிக்கக் கூடியது .ஆனால் அரசியல் என்பது பலவழிகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளைந்தும் ,நெளிந்தும் ,பணிந்தும் ,வேண்டிய இடத்தில விலைபோகியும் தமது இலக்கை அடைய வேண்டிய ஒரு சிக்கல் மிக்க ஒருதளம் தான் .அதனால் தான் அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று முன்மொழியப்பட்டு வழி மொழியப்படுகிறது.அதட்காக நான் தமிழ் தேசிய கூட்டமைப்பை இன்று ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை .அரசியலின் உண்மை தன்மையை எது என்பதை சொல்லுகிறேன் .நியாயபடுதவில்லை .
எந்த ஒரு உயரிய நோக்கத்துக்காக மிகவும் சிரமப்பட்டு மிகத்திறமையாக உலகம் வியக்க எமது தேசிய தலைமையால் உருவாகக்கபட்ட மிகவும் அரசியல் தனிபலம் கொண்ட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைரீதியாக என்று வெளித் தோற்றத்துக்குக் காரணம் கட்டிக்கொண்டு பல பிரிவுகளாக பிளவு பட்டு எம்மை இடியாக நிலைகுலைய வைத்துள்ளது இன்று .ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி கரிபூசியா படியே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்மொழிந்தார்கள்.எதிரி எதனை உருவாக்க துடிதானோ ,அதனை தாமே உருவாக்கியபடி எமது புலம்பெயர் உறவுகளையும் ,எதிரியின் கோட்டைக்குள் இருந்து தினம் தினம் தினறிக்கொண்டு இருக்கும் எம் தாயாக உறவுகளையும் தாமே குழப்ப முன்வந்து செயல் பட்டுக் கொண்டு இருந்தனர் .இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் தமது வார்த்தை ஜாலங்களால் இணையதளங்கள் முலமாக .ஆனால் எமது மக்கள் எத்தனை இன்னல்களையும் ,துரோகங்களையும் மாறி மாறி தொடர்சியாக அனுபவித்தாலும் தமது முடிவை அன்று தொடக்கம் இன்றுவரை மிகத் தெளிவாக நேரடியாகவும் ,இராஜதந்திரமாகவும் உலகிற்கும் ,சம்பந்தபட்ட தரப்பிற்கும் தெரிவித்தே வருகிறார்கள் .
புலிகளை ஒட்டுமொத்த உலகமும் ,இலங்கை அரசாங்கமும் முற்றாக அழித்தது விட்டதாக சொல்லி மார்பு அடித்து கொண்டிருந்த வேளை எந்த இலட்சியத்துக்காக தமது கைகளில் ஆயுதம் ஏந்தி உரிமைபோரடத்தை தொடர்ந்தார்களோ புலிகள் அந்த இலட்சியதைகொண்ட ,அன்று தந்தை செல்வாவால் மக்கள் ஆணையுடன் நிறைவேற்றிய வட்டுகோட்டை தீர்மானத்தை உலகு எங்கும் வீச்சாக ,உறுதியோடு வேர்பரப்பி வாழும் எம் புலம்பெயர் உறவுகள் மீண்டும் ஒருமுறை உலகமே ஏன் இலங்கை அரசாங்கமே நடுநடுங்கும் அளவிற்கு தமது வாக்குகளை 98% அதிகமாக வழங்கி தமது வரலாற்று கடமைக்கு வலு சேர்த்து வருகிறார்கள் .
அதே போல் இன்னும் பலமடங்கு இராஜதந்திரமாக எதிரியின் கோட்டைக்குள் இருந்து கொண்டு பல அழிவுகள் துரோகங்களுகுள்ளும் ,குழப்பங்கள் உள்ளும் ஜனாதிபதி தேர்தலுக்கு தக்க பதிலடியையும் கொடுத்த எமது தாயாக உறவுகள் .இன்றும் மிகத்தெளிவாக தமது பதிலை இந்த நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெளிகாட்டி நிக்கின்றனர் .அது என்ன செய்தி ...!? இதுதான் அது .
" நாம் உங்கள் மீது நம்பிக்கையும் ,உறுதியும் வைத்து இருந்தோம் இறுதிவரை .எதுக்காக ? எமது தேசிய தலைமையினால் உருவாக்கபட்ட உறுதியான எமது இலட்சிய கொள்கைபிசகாத விலை போகாத அரசியல் கட்சி என்பதால் .ஆனால் எமது தேசிய தலைமை மறைகபட்டார்கள் என்ற மாயை தோன்றியதும் நீங்கள் நீங்களாக இல்லாது எமது அடிப்படை உரிமை மற்றும் இலட்சிய கனவு என்பவற்றில் இருந்து விலகியும், எம்மையும் வசிய படுத்த நீங்கள் அரசியல் இலாபம் ஈட்டவும் நாம் இராஜதந்திர நகர்வை மேற்கொள்கிறோம் என்று கூறிவருகிறீர்கள் .எங்களை குழப்பி எமது போராட்ட சக்தியை மழுங்கடிக்க செயல் பட்டு வருகிறீர்கள் .ஆனாலும் 65 வருடங்களாக எல்லாவிதமான துன்பங்களையும் ,இழப்புகளையும் ,துரோகங்களையும் நன்றாகவே மக்கள் ஆகிய நாம் எமது தேசிய தலைமை ஊடாக கற்று தெளிந்து உள்ளோம் .நாம் ஒன்றும்Currentகும் ,TVக்கும் விலைபோகும் தமிழ்நாட்டு பகுத்தறிவு அற்ற மக்கள் கிடையாது .உங்களின் பருப்பு எங்களிடம் வேகாது நாமும் அறிவாலும் ,பிறப்பாலும் நியமான புலிகள் .என்று மீண்டும் ஒரு முறை உங்களில் ஒருபகுதியினரை ஓரம் கட்டியும் ,மற்றைய பகுதியினருக்கு இறுதி சந்தர்பத்தை மிகச்சிறிய வாக்குகளால் தந்தும் ,எப்போதும் எங்கள் ஏக பிரதிநிதிகள் நீங்கள் அல்ல எமக்காக உண்மையாக போராடும் எமது தேசிய இராணுவம் எமது புலிகளே ...! என்பதை நாம் இன்று எதிரியின் கோட்டைக்குள் இருந்து 85%க்கும் அதிகமான மக்கள் இத் தேர்தலை இராஜதந்திரமாக புறக்கணித்து எமது அரசியல் சானகியத்தை நாம் மீள நிருபித்து எமது புலம்பெயர் உறவுகளுடன் சேர்த்து பயணிக்கிறோம் மீண்டும் எமது இறுதி இலக்குவரை உறுதியுடன் என்பததை நிருபித்து உள்ளோம் . இந்த எமது இராஜதந்திர நகர்வு என்பது எமது பௌதாய்வு செய்து பயணிக்கும் எமது பௌக்தறிவே என்பது இதன் முழு அர்த்தம் .
இதில் ஒரு கேள்வி ஏழுகிறது .அது பலராலும் ஏற்றுகொள்ள முடியாத திணறும் ஆசாரியமான உண்மை.அதுதான் தமிழ் தேசிய கூடமைபில் இருந்து முற்றாக விலகி அல்லது தமிழ் தேசிய கூடமைப்பால் ஓரம் கட்டபட்ட புதிதாக முளைத்த தமிழ் தேசியதுக்கான மக்கள் முன்னணி என்ற அரசியல் அமைப்பு .அவர்களை ஏன் மக்களும் முழுமையாக ஓரம் கட்டினார்கள் ?
மக்களின் பார்வையில்" தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி ஆகிய நீங்கள் தீடீர் என்று பிரிந்து ,தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அடிப்படை கொள்கையில் இருந்து முற்றாக விலகி விட்டது ,அதனால் தான் நாம் அதில் இருந்து முற்றாக விலகி விட்டோம் .ஆனால் நாம் அந்த அடிபடைகொள்கையினையே நாம் எமது தேர்தல் பிரசாரமாக முன்வைக்கிறோம் நீங்கள் அந்த உண்மையினை புரிந்து எமக்கு ஆணை தாருங்கள் என்கிறீர்கள் .ஆனால் மக்கள் ஆகிய நாம் சரியான பதிலை இப்போது உங்களுக்கும் தந்துள்ளோம் .அது என்ன?உங்களின் உறுதியை மதிக்கிறோம் .ஆனால் நீங்கள் இன்னமும் செயலால் வளரவில்லை .செயலால் வளர்ந்தபின் எம்முடன் இவ்வாறு பேசுங்கள் .உங்களுக்கு நாம் ஆணை தருகிறோம் அன்று .இப்போது நீங்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் .நீங்கள் விஷ காளான்களா அல்லது நியகாளங்களா என்று சரியாக சொல்ல எமது தேசிய தலைமை தற்போது இங்கு களத்தில் இல்லை .அதனால் நம்பிக்கையுடன் உங்களுக்கு உடனடியாக எமது பலத்தை தரமுடியாது .ஏன் எனில் " நாம் அரசியல் வாதிகள் அல்ல புரட்சி வாதிகள் " என்ற தேசிய தலைமையின் சிந்தனையை இன்று செயல் வடிவமாக்கி உள்ளோம் உங்களுக்கும் சேர்த்து என்பதே உண்மை " என்று ஆணித்தரமாக இடித்து உரைத்துள்ளனர் எம் தாயாக மக்கள் இத் தேர்தலில் தமது வாக்குகளால் .
அதே நேரம் "தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் இன்னமும் நம்பவில்லை ஆனாலும் மரியாதை வைத்து உள்ளோம் .எதற்க்காக எமது தேசிய தலைமை உருவாகிய ஒருபலம் பொருந்திய அமைப்பு .ஒருவேளை நீங்கள் இராஜதந்திர நகர்வை மேற்கொளுவீர்கள் என்று 18%க்கும் குறைவான வாக்குகளால் உங்களுக்கு மீண்டும் ஆணை தந்து உள்ளோம் .ஆனால் உங்களை எமது ஏக பிரதிநிதிகளாக நினைக்கவில்லை .இந்த சந்தர்பத்தை கைவிடாது எதிரிகளுக்கும் ,துரோகிகளுக்கும் விலை போகாது ஈடு இணையற்ற எமது போராடத்தை விற்காது செயல் படவேண்டும் என்று இறுதியாக உங்களுக்கு உயிர் பிச்சை தந்து உள்ளோம் .அதே நேரம் 85% அதிகமான மக்களால் இந்த தேர்தல் முற்று முழுதாக புறக்கனிகபட்டு நாம் விடுதலை புலிகளை தவிர எந்த தலைமையுமோ அல்லது எந்த ஜனநாயக கொள்கையுமோ ஆதரிக்காது முற்றாக எதிர்க்கிறோம் .எமது தீர்ப்பு தனிநாடு ஒன்றுதான் என்பதை மிகவும் இராஜதந்திர ரீதியாக உலகுக்கும் ,சம்பந்த பட்ட தரப்புக்கும் ,இலங்கை அரசாங்கத்துக்கும் எதிரியின் கோட்டையில் இருந்து இடித்து உரைக்கிறோம் .என்பதுதான் உண்மை ".எமது மக்களின் அரசியல் மற்றும் அறிவியல் இராஜதந்திர போக்கை கண்டு இன்று இலங்கை அரசாங்கமும் ,எம்மை அழிக்க துடிக்கும் உலகமும் மீண்டும் ஒருமுறை கதிகலங்கி நிக்கின்றது செய்வது அறியாது .
எந்த உண்மையை சரிவர அறியாமல் ,அரசியல் ஞானம் அற்று பிதற்றி கொண்டு பக்கசார்பாக செயல் படும் " தமிழ்வின் " போன்ற இணைய தளங்கள் " வடகிழக்கு மக்கள் படித்தவர்கள் ,அறிவாளிகள் என்று எல்லோராலும் போற்ற பட்டவர்கள் .ஆனால் தேர்தலை பெரும்பாலானோர் புறக்கணித்து விட்டதால் புத்திஜீவிகள் எல்லோரும் விசனம் அடைகிறார்களாம் "என்று பக்க சார்பாக மக்கள் மீது பழிபோடுவது மிகவும் கீழ் தரமான ஒரு செயல் என்பதை வன்மையாக சுட்டிகாட்ட விரும்புகிறேன் .எதிரி என்னதான் கலாசார சீரழிவுகளையும் ,அரசியல் நகர்வுகளையும் ,வன்முறைகளையும் எம் மக்கள் மீது திணித்தாலும் எம் மக்கள் அன்றும் சரி ,இன்றும் சரி விலை போகவில்லை .விலை போகவும் மாட்டார்கள் .தமது உரிமைக்காக தொடர்ந்து போராடுவார்கள் என்பதை இன்றைய உலகுக்கான இந்த நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்களின் இறுதி முடிவும் ,ஆணையும் .அவர்களின் தலைமை எப்போதும் என்றும் புலிகளே .அவர்களின் நகர்வும் அவர் தன் வழியே .தமிழீழத்தின் கதவுகள் இன்று இரு துருவங்களாக மாற்ற பட்டு விட்டது .தாயாக மக்களின் தன்னிகர் அற்ற துணிவும் துல்லியமான அரசியல ராஜதந்திர நகர்வும் ,அடுத்து இரண்டாவதாக புலம்பெயர் உறவுகள் உடன் இணைந்த உலக தமிழரின் பேர் எழுச்சியும் ,வீரம் செறிந்த நுட்பமான வரலாறு போராட முன் எடுபுகளும் .
இது தொடரும் ,தொடரவேண்டும் .இதனை மனதில் கொண்டு மக்கள் தந்த ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,மக்கள் தந்த தீர்ப்பை தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் எடுத்து சரியாக நோக்கி மீண்டும் ஒருமுறை ஒன்றாக ஒற்றுமையுடன் பயணிகவேண்டியது இன்றைய காலத்தின் களத்தின் கட்டாயம் .இல்லையேல்" நாம் யாரயும் ஏமாற்றவும் இல்லை ,துரோகம் இழைக்கவும் இல்லை .ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் ,நாம் பதில் அடிகொடுக்க தயங்க மாட்டோம் " என்ற தேசிய தலைமையின் சிந்தனை செயல் வடிவமாகும் என்பது மக்களின் கடைசி எச்சரிக்கையும் ,முடிவும் கூட .
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
நன்றி
ஆக்கம் உங்கள் அக்கினி புத்திரன் (மீண்டும் வருவான் )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment