அழியும் இந்தியா....!!!
சோனியாவின் வெறுப்பில் அழியும் இந்தியா!!
தமிழீழ மக்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சந்திக்காத கடும் துயர்களை எல்லாம் அவர்கள் சந்தித்து விட்டார்கள். இன்று உலக நாடுகள் தமிழீழ மக்களின் வாழ்வியல் நிலைக் குறித்து தமது நிலைகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழின உறவுகள் வெளிப்படையான தமது ஆதரவை அச்சமின்றி பதிவு செய்ய துவங்கியிருக்கிறார்கள். ஊடகங்கள் சில விபரங்களை வெளியிட தொடங்கி இருக்கின்றன. தமிழர் மறுவாழ்வு குடியமர்வுக்கு இலங்கை அதிபர் இனவெறி பிடித்த ராசபக்சே உறுதி அளித்திருப்பதாக செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதிக்கு இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. தமிழீழ மக்களை குடி அமர்த்துவதற்காக இந்தியா தொடர்ந்து செயல்படும் என்பதை அந்தக் கடிதம் குறிப்பிட்டிருக்கிறது.
கருணாநிதி எண்பத்து ஏழாயிரம் மக்கள் என்று சொன்னார், ராசபக்சே ஐம்பத்து நாலாயிரம் மக்கள் என்று சொன்னார், மன்மோகன்சிங் நாற்பத்து ஏழாயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று சொல்கிறார். இந்த எண்ணிக்கையில் உள்ள முரண்பாடு நம்மை அச்சுற வைக்கிறது. முன்னர் நாம் தெரிவித்ததைப் போல தமிழீழ இளைஞர்களை பொறுக்கி எடுத்து, அவர்களை கொன்றொழிக்கும் திட்டத்தை சிங்கள பேரினவாத அரசு செய்கிறதோ என்ற அச்ச உணர்வு நமக்கு எழுவது நியாமானதாகக்கூட தெரிகிறது. இலங்கையில், இலங்கை ராணுவம் தமிழீழ மக்கள் மீது நடத்திய அக்கிரம போர் முடிந்து ஓராண்டு நிறைவடைகிறது. இன்னமும்கூட தாம் தமிழர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்ற கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அண்மையில் இந்தியப் பயணம் மேற்கொண்ட இனவெறியன் ராசபக்சே, இந்தியாவின் சிறப்பு வரவேற்பை பெற்று, பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு மகிழ்ச்சியோடு நாடு திரும்பியிருக்கிறான். இந்தியாவிலிருந்து எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவையும் சுருட்டிக் கொண்டு, இந்தியாவின் கரத்தைக் கொண்டு தமிழர்களின் கண்களைக் குத்திய பெரும் கொடுமையை நிகழ்த்திய இந்த சிங்கள வெறியன், இனிவரும் காலங்களில் இந்திய வல்லாதிக்க அரசுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிவிடுவானோ என்ற அச்சம் பரவலாக அரசியல் ஆய்வாளர்கள் இடையே ஆழமாக சலசலத்துக் கொண்டிருக்கிறது. என்னக் காரணம் என நாம் ஆய்வு செய்தோமேயானால், உலகத்தையே ஆட்டுவித்த கொடுங்கோலன் ஹிட்லர், மிகச் சாதாரணமாக ஒரு தகவலை சொன்னாலும்கூட, இந்த தகவலில் உள்ள உண்மை நம்மை வியப்பு மேலோங்கிட பார்க்கத்தான் செய்கின்றன.
அதாவது, உலகை முழுக்க தமது ஆதிக்கத்தின்கீழ் என்னால் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை இந்தியாதான் எனக்கு அளித்தது என்று சொல்லிய ஹிட்லர், அதற்கான காரணம் சொல்கின்றான். வெறும் பத்தாயிரம் பேரைக் கொண்ட ஒரு கிழக்கிந்திய கம்பெனி, இவ்வளவு பெரிய நாட்டை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முடியுமேயானால், இவ்வளவு பலம் வாய்ந்த படை வைத்திருக்கும் ஜெர்மனியர்கள் ஏன் உலகத்தை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முடியாது என்று ஹிட்லர் கூறியதாக ஒரு தகவல் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி என்கின்ற ஒரு வணிக நிறுவனம்தான் இந்தியாவை காலணியாக ஆட்சி செய்தது என்கின்ற அவமானகரமான வரலாற்று உண்மை இன்றும் நம்மை உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இலங்கையின் போக்கும் சற்றேறக்குறைய அவ்வாறு மாறிவிடுமோ? என்று நினைக்க இலங்கையின் சூழ்நிலை அமைந்துக் கொண்டிருக்கிறது.
சிங்கள ராணுவப்படை தமது ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ளும் விதமாக படைப்பலத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றன. படை பலத்தோடு சேர்ந்து கருவிகளின் ஆதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொண்டு, அதைக்கொண்டு இந்தியாவை அச்சுறுத்த முடியுமா? என்ற கேள்வி எழலாம். வெறும் 12 போர் விமானங்களைக் கொண்ட இலங்கை விமானப்படை நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டுள்ள இந்தியாவை எப்படி மிரட்டும்? என்ற கேள்வி இயல்பாக எல்லோருக்கும் எழுவது இயற்கை தான். ஆனால் பழ.நெடுமாறன் அவர்கள் தொடர்ந்து ஒரு செய்தியை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார். அது இந்தியாவிற்கு இலங்கையால் பேராபத்து நிகழப் போகிறது என்பதுதான். தற்சமயம் பல்வேறு ஆய்வுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, அது உண்மை என்பது போன்றுதான் தோன்றுகிறது.
வெறும் 2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை, தமது முப்படை அணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொண்டுள்ளது. இதில் 3 லட்சம் பேர் தரைப்படையைச் சேர்ந்தவர்கள். 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே ராணுவ கட்டமைப்பில் இருக்கும்போது, 2 கோடி பேருக்கு 3 லட்சம் ராணுவப்படையினர் என்பது அளவிட முடியாத ஒரு கட்டமைப்பாகும். மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இயல்பான ஒரு சமரசமற்ற போக்கே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சீனா, இந்தியாவிற்கு எதிர் நிலை அமைக்கும் நாடு என்பதிலே இருவேறு கருத்துக்கு இடமில்லை. அமெரிக்கா அமைத்துள்ள நேட்டோ படையைப் போல, ஒருவேளை சீனா ஒரு ராணுவக் கட்டமைப்பை அமைக்குமேயானால், அந்தப் படையிலே நிச்சயமாக சிங்கள பாசிச அரசு இடம் பெறுவதற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு அமையும்போது, அது இந்தியாவை அச்சுறுத்தும் கட்டமைப்பாகவே அமையும் என்பதை நாம் எளிதில் தள்ளிவிட முடியாது.
வெறும் 2 லட்சம் ராணுவத்தினரைக் கொண்ட இஸ்ரேல், பலகோடி மக்கள் தொகைக் கொண்ட அரபு நாடுகளின் ஆதிக்கத்தை ஒடுக்கி, தமது அதிகார நடுவத்தை நிறுவ தொடர்ந்து முயற்சிப்பது எப்படி? என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால், இஸ்ரேல் என்பது மேலோட்டமாக ஒரு தனி நாடைப் போன்ற தோற்றத்தை பெற்றிருந்தாலும், அது அமெரிக்காவின் ராணுவ தளவாடக் களம் என்பதுதான் உண்மை. இஸ்ரேல் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பைப் போல, அமெரிக்காவின் கழுத்திலே சுற்றிக் கொண்டிருப்பதால், அரபு நாடுகளுக்கு, அரபு நாடுகளின் நடுவிலே இருந்துக் கொண்டு, ஒட்டுமொத்த அரபு நாடுகளுக்கும் சவால்விடும் அளவிற்கு இருக்கிறது. இதற்கு ஒரே காரணம், இஸ்ரேல் அமெரிக்காவின் ராணுவத் தளம் என்பதுதான். இந்த கண்ணோட்டத்தோடு நாம் இலங்கையைப் பார்த்தோமென்றால், இந்தியா மிகப் பெரிய நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு இஸ்ரேல் ராணுவத் தளத்தைப்போல சீனாவிற்கு இலங்கை ராணுவத் தளமாக மாறிக் கொண்டிருப்பதை நம்மால் காலம் தாழ்ந்தாவது புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், இந்தியா கைநழுவிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அதன் முடிவில் தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்கின்ற நிலை வருமேயானால், தேச பக்தி, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் வாய்சவடால் அடிப்பவர்களுக்கு இது மிகப்பெரிய அவமானகரமான நிலையை தோற்றுவிக்கும்.
ஒரு காலத்தில் இஸ்ரேல் அரபு நாடுகளை மிரட்டுவதைப் போல, இலங்கை இந்தியாவை மிரட்டாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. வரலாற்று நிகழ்வுகளின்படி ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்திருக்கும் சீனா, பல்வேறு தருணங்களில் இலங்கையை காப்பாற்றி இருக்கிறது. இன்று நிலை மாறி, பொருளாதார ரீதியில் இலங்கையின் தன்னிறைவுக்காக சீனா பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் தொடருமேயானால், இந்துமா பெருங்கடலில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரும் சவாலாக இலங்கை-சீன உறவு இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆற்றல் வாய்ந்த ராணுவ கட்டமைப்பை நிலை நிறுத்தி இருந்தவரை கடலுக்குள் எந்த நாடுகளும் நுழையாத அளவிற்கு ஒரு மாபெரும் பாதுகாப்பு அரணை அமைத்திருந்ததை இப்போதுகூட இந்தியா உணராவிட்டால், அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தித் தரும்.
சீனாவைப் பொருத்தவரை படை, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தன்மைகளில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி தம்மை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக முடிந்தவரை சீனத்தின் ஆதிக்கத்தை பரவலாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு எவையெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்துக் கொண்டிருக்கிறது. இது மயிலிறகால் நீவி, வெற்றி பெறும் ஒரு அரசு தந்திரமாகும். இந்த முறையை சீனா மிக சிறப்பாக கையாண்டுக் கொண்டிருக்கிறது. சீனாவைப் பொருத்தமட்டில் தமது நேசநாடுகளை தட்டி வளர்த்தெடுத்து, அங்கிருக்கும் ராணுவத்திற்கு தமது கருவிகளை கொட்டிக் கொடுத்து, வலுமிக்க ராணுவமாக, அந்தந்த நாடுகளை உருவாக்கி, வரும் காலத்தில் போர் என்கின்ற ஒரு சூழல் வரும்போது, தாம் உருவாக்கிய ராணுவத்தைக் கொண்டே தமது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதாகும்.
அந்த அடிப்படையில் சீனத்தின் எதிரியான இந்தியாவை இலங்கைப் படையைக் கொண்டு மிரட்டுவதற்கு, இலங்கைப் படையைக் கொண்டு வீழ்த்துவதற்காக வியூகங்களை சீனா திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உலக அரசியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக, மியான்மர் நாட்டு ராணுவத்தை மிக சிறப்பாக வடிவமைத்து, அந்நாட்டு படையினருக்கான அதிநவீன தொழில்நுட்ப ஆற்றல்களை கொடுத்து, அவர்களை சிறந்த ராணுவமாக வலுபெற செய்வதற்கான பணிகளை சீனா தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நாளை மியான்மர் ராணுவம் சீனத்தோடு இணைந்து களத்திலிருக்கும். இப்படி ஆசிய கண்டத்தில் சீனத்தோடு இணையும் நாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருப்பது இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும் என்பதை இனியும் புரிந்து கொள்ளாவிட்டால், அது சரியானதல்ல என்பதை நாம் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
நம்முடைய வாதத்தின்படி இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள, இலங்கை ராணுவத்தினரில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், சீனாவின் மூளை பொருத்தப்பட்டால், அவர்கள் முற்றிலும் முழுதுமாக சீன ராணுவமாகவே செயல்படுவதற்கான காலம் மிக அருகிலேயே இருக்கிறது என்கின்ற அபாய ஒலியை உலக ஆய்வாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். எமது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்று திரும்பும்போதும், கச்சத்தீவில் நடைபெற்ற அந்தோணியார் திருவிழாவின்போதும் அவர்கள் பதிவு செய்த ஒரு செய்தி, அங்கே சிங்கள ராணுவத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்ளும் பலர், சீனத்தினராக இருக்கிறார்கள் என்பதுதான். இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் சோனியா தனது சுய விருப்பு வெறுப்பிற்காக தமிழீழம் என்ற ஒரு நாட்டை அழிப்பதற்கு துணை புரிந்தார். ஆனால் தமிழீழம் மலர்வதற்கான சூழலையும், முன்னைக் காட்டிலும் மிக ஆற்றல்வாய்ந்த நாடாக தமிழீழம் அமைவதையும் இனி யாராலும் நிராகரிக்க முடியாத அளவிற்கு அதன் தன்மைகள் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. மேற்கு உலக நாடுகளின் பார்வையில் இலங்கை சீனத்தின் படைத்தளமாக மாறுவதை உணர்ந்து கொண்டதால், அவர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்க அவர்களுக்கான ஒரு ராணுவம் ஆசிய கண்டத்தில் தேவைப்படுமேயானால், அந்த கட்டமைப்பு தமிழீழத்தில் உருவாக்கப்படலாம்.
அப்படி உருவாக்கப்படும்போது தமிழீழம்கூட இந்தியாவின் பகை நாடாக வலுப்பெற வாய்ப்புகளை சோனியா காங்கிரஸ் கூட்டம் செய்து பெரும் தவறை இந்திய மக்களின்மீது திணித்துவிட்டது. போகின்ற போக்கில் முன்னைக் காட்டிலும் தமிழீழம் என்பது உறுதிபடுவதற்கான அரசியல் காரணங்கள் இறுகி வருவதை நம்மால் காண முடிகிறது. நாம் திட்டமிட்டதைவிட, நாம் கற்பனை செய்ததை விட, நாம் களமாடியதைவிட, நாம் கதைப்பதைவிட மிக விரைவாகவே தமிழீழம் அமையும். அதற்கான காரணங்களும் நிலைகளும் மிக உறுதியாக இருக்கிறது. மேலும் மேலும் நாம் அந்த வரலாற்றுக் காரணங்களை ஆய்வு செய்து தமிழீழம் அமைவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உறுதியாக்குவோம். வெற்றிபெறுவோம். தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ சனநாயக குடியரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நாம் தயங்காமல் களமாடுவோம். தமிழீழம் பெறுவோம்.
ஆக்கம் : தமிழீழத்தில் இருந்து கண்மணி

தேசிய தலைவரின் தம்பிகள்.......!!!
அடர்ந்த வனப்பகுதி. தொடர்ந்து கட்டளைகள் அலை அலையாக வந்துக் கொண்டிருக்கின்றன. தாயாராகி விட்டதா? என்ற தலைமையின் கட்டளை, தயார் என இங்கிருக்கும் கட்டளை தளபதியின் பதில். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பாதையை தம்முடைய கூரிய கண்களோடு நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து ஒளி வெள்ளம். அனைவரும் தயார் நிலைக்கு வருகிறார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. காரணம், குழந்தைகள் கர ஓசை எழுப்பி, பாடி வரும் குரல். கூர்மையோடு பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்கு படபடப்பு எழத்தொடங்குகிறது. தலைமையோடு தொடர்பு கொள்கிறார்கள். தலைமையிலிருந்து கட்டளை பிறக்கிறது, அந்த வண்டி வந்து சேருவதற்குள்ளாக யாராவது சென்று அந்த கண்ணிவெடியை மிதித்து கொடையாளியாகுங்கள் என. போராளி ஒருவர் ஓடிச்சென்று கண்ணிவெடியை மிதித்து சுக்கு நூறாக வெடித்து சிதறுகிறார். சற்றேறக்குறைய 55 குழந்தைகளோடு வந்துக் கொண்டிருந்த அந்த சுற்றுலாப் பேருந்து, குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு 10 மீட்டருக்கு முன்னால் நிற்கிறது.
அனைவரும் மலைத்து நிற்கிறார்கள். அதற்குப் பின்னால் வந்துக் கொண்டிருந்த ராணுவ வண்டியை குறிவைத்து புதைக்கப்பட்ட கண்ணி வெடியில் சிக்கி, சாதாரண குழந்தைகள் சாகக்கூடாது என்பதற்காக தம்மை பலிக்கொடுத்து, சாகாவரம் பெற்ற மாவீரர்களாக மாறி நின்ற இயக்கத்திற்கு சொந்தக்காரர்கள், தமிழ்தேசிய விடுதலைப் புலிகள். எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் செத்துப்போகக் கூடாது என்பதிலே மிக அக்கறையோடு களமாடியவர்கள். மேற்கண்ட நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்த சம்பவம். இன்றுவரை இந்த நிகழ்வு நம் மனதிலே பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. எப்போதுமே புரட்சியாளர்கள் அப்பாவி மக்கள்மீது தங்களுடைய கருவிகளை அறைவது கிடையாது. எந்த இன மக்களோடும் எந்தக் காலத்திலும் புரட்சியாளர்களுக்கு பகைமை கிடையாது. அவர்கள் முற்றும் முழுதுமாக தம் எதிரியோடு மட்டுமே களமாடுகிறார்கள்.
அவனோடு மட்டுமே தமது மோதலை கைக்கொள்கிறார்கள். கோழைகள்தான் கருவி ஏந்தாத மக்களோடு மோதி, அவர்களை கொன்றொழிப்பார்கள். போராளிகள் ஒருபோதும் கருவி அற்ற கரங்களோடு தமது கரங்களை மோத விடுவது கிடையாது. இது வரலாறு மட்டுமல்ல, போராளிகளின் தத்துவமும் கூட இதுதான். இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே அப்பாவி சிங்களர்கள் கொல்லப்பட்டதாகவோ, அல்லது சிங்கள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவோ ஒரு சிறு தகவல்கூட நமது பகைவனால்கூட நமக்குத் தரமுடியாது. உலகிலேயே தம்மை முழுமையாக எவ்வித சமரசமும் இன்றி, தம்மை களபலியாக்கத் துணிந்த தற்கொடையாளர் அமைப்பு நமது தேசிய ராணுவத்திடம் மட்டும்தான் மதிநுட்பத்தோடு இருக்கிறது. நாம் பலமுறை சொன்னதைப்போல ஒருவேளை மேதகு தேசிய தலைவர் அவர்கள் கட்டளையிட்டிருப்பாரேயாகில், சிங்களர்கள் லட்சக்கணக்கிலே சிதறி செத்திருப்பார்கள்.
மாந்த உயிர்களை குறித்து மரியாதை கொண்டவராகவும், மாந்த மாண்பை உயர்வாக எண்ணியவராகவும், மாந்தத்தின் அளப்பறியா ஆற்றலை உளமாற நேசிப்பவராகவும் தேசிய தலைவர் இருந்த காரணத்தினால், எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது என்பதிலே மிக நேர்த்தியாக, நேர்மையாக, உண்மையாக நடந்து கொண்டார். இதுவே சிங்கள மக்களைக்கூட நமது தேசிய தலைவரை, தலைவராக ஏற்றுக் கொள்ள துணிவைத் தந்தது. சிங்கள இளைஞர்களில் பலர் தேசிய தலைவரை தமது கதாநாயகனாக உளமாற நேசிப்பதை பல்வேறு செய்திகள் எடுத்துக் கூறுகின்றன. இவ்வளவு செய்திகளையும் நாம் சொல்லிக் கொண்டு வருவதற்கு காரணம், நாம் எல்லோரும் அறிந்ததுதான். கடந்த ஜூன் 12ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தனியில் இருப்புப்பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டிருப்பதை உணர்ந்து, தொடர்வண்டி நிறுத்தப்பட்டதாகவும், சற்றேறக்குறைய 2500 பயணிகள் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வந்தன. அந்த செய்திகளுக்கு இடையே ஒரு துணை செய்தி. ஒரு துண்டு காகிதத்தில் ஒரு 7 வரிகளில் தகவல் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
அந்த தகவல், மத்திய அரசே! ரத்த வெறிக் கொண்ட ராசபக்சே இந்தியா வந்ததை கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணைப்போன இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டிக்கிறோம். தமிழா! இனியும் மௌனம் காத்தால் புரியாது நமது மௌன வலி. இவண் மேதகு பிரபாகரன் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாம். இந்த செய்தியை பார்த்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டில் இப்படி குண்டு வெடிக்கும் நிலை இல்லை. விழுப்புரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், 1 மீட்டர் நீளத்திற்கு இருப்புப் பாதை வெடிவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது. அங்கே தேசிய தலைவரின் தம்பிகள் என்ற குறிப்போடு ஒரு துண்டுச் சீட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழ் மாநில காவல்துறைத் தலைவர் லத்திகா சரண், என்ன நடந்தது? எப்படி நடந்தது? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இந்த நிகழ்வுகளுக்கு யாரெல்லாம் காரணமாக இருப்பார்கள்? என்பதையெல்லாம் கொஞ்சமும் அலசி, ஆராயாமல் நேரிடையாக சில மணி நேரங்களிலேயே சொல்கிறார், இந்த நிகழ்வுகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று.
நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கிறது. நிகழ்ந்தது மிகப்பெரிய செயல். ஒருவேளை தொடர் வண்டி துறையின் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான மாந்த உயிர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டிய காவல்துறையின் தலைவர், மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பில்லாத செயல் என்று கூறுகிறார். அதைவிட கொடுமையாக புலனாய்வுத்துறை தலைவரான ஜாபர்சேட், இது விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று எவ்வித விசாரணையும் செய்யாமல் ஊடகத்திற்கு அறிவிப்பு செய்கிறார். நிகழ்வு நடந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட துண்டு காகிதத்தின் மூலம் ஒரு விசாரணை நிறைவு பெறுமா? அதைக் கொண்டே ஒட்டுமொத்த விசாரணையையும் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த யூனியன் கார்பைடு நிறுவத்தின் கொலை கள விசாரணை, கால் நூற்றாண்டுகளாக நிகழ்ந்து, அதில் பிறழ் நீதி நிகழ்ந்து, குற்றவாளிகள் மிக எளிதாக தப்பிக்க முடிந்தது.
கால் நூற்றாண்டு விசாரணைக்குப் பிறகும்கூட ஒரு மிகப்பெரிய மாந்த அவலத்தில் கண்டுபிடிக்க முடியாத உண்மையை சில மணி நேரங்களில் பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் கூறுவதற்கு யார் அவர்களை தூண்டியது என்று மக்கள் கேட்கிறார்கள். இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அந்த துண்டு காகிதத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒரு தகவலை தெரிவிப்பது சரியான நிலைப்பாடா? குற்றம் செய்தவர்கள் முட்டாள்தனமாக தாம் மாட்டிக் கொள்ளும் விதமாக இவ்வளவு கேவலமான ஒரு இழிச் செயலுக்கு பொறுப்பேற்பார்களா? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நிகழ்வு நடந்த சில மணி நேரங்களிலேயே இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பதின் மூலம் இவர்கள் எதைச் சொல்ல முன்வருகிறார்கள் என்கின்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. நமக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா என்ற கொலைக்காரன் இனஅழிப்பை மேற்கொண்ட வேறொரு கொலைவெறியன் ராசபக்சேவோடு சேர்ந்து இந்தியாவிற்கு வந்தான். வந்தவன், இந்தியாவின் பிரதமரோடு கைகுலுக்கி, வாய்நிறைய புன்னகைத்தான். இது டெல்லி அரசியலிலும், தமிழக அரசியல் தளங்களிலும் பெரும் விமர்சனப் பொருளாகியது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த தமிழீழ மக்களின்விடுதலைக் குறித்த தாக்கங்கள், இன்று வடநாட்டு ஊடகங்களிலும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. உலகெங்கும் இருக்கும் தலைவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ராசபக்சேவின் இன அழிப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். நமக்குரிய சந்தேகம் என்னவென்றால், நிகழ்வு ராசபக்சேவிற்கு எதிராக போய்க் கொண்டிருக்கும்போது, இதை திசை திருப்புவதற்காக இந்திய உளவுத்துறையே விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுவதற்காக இப்படிப்பட்ட ஒரு செயலை ஏன் செய்திருக்கக்கூடாது என்பதுதான்.
யாராய் இருந்தாலும் ஒரு துண்டு சீட்டின் மூலம் முடிவெடுப்பது வடிவேலு சொல்வதைப்போல சிறுப்பிள்ளைத் தனமாக இருக்கிறது. பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு சொல்வது இரண்டு விதத்தில் நம்மை சிந்திக்க வைக்கின்றது. ஒன்று, டக்ளஸ் தேவானந்தாவின் செய்தியை மூடி மறைக்க இதை செய்திருக்கலாம். இரண்டு, முன்பைக் காட்டிலும் இப்போது வீச்சடைந்திருக்கும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, தமிழீழ விடுதலைக்கு ஆதரவு களத்தில் இருப்பவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த கருவியை அரசே கையில் ஏந்தியிருக்குமோ? என்பதுதான். குற்றவாளிகளை பிடித்து, விசாரித்து, மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு இடம் கிடையாது. ஆனால் சமீப காலங்களில் ஊடகங்களில் நமது உளவுத்துறை குறித்தும், நடுவண் புலனாய்வுத்துறை குறித்தும் வரும் தகவல்கள் கசப்பாகவே இருக்கின்றன.
ஒட்டுமொத்த அரசுத் துறைகளும், அரசியல் சாயங்களோடுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சுமத்துவதிலிருந்தே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நாம் இறுதியாக சொல்ல நினைப்பது என்னதென்றால், கடந்த காலங்களிலாகட்டும், நிகழ்காலத்திலாகட்டும், எதிர்காலத்திலாகட்டும், புரட்சியாளர்கள் ஒருபோதும் அப்பாவி மக்களின் உயிரை பணையம் வைக்க மாட்டார்கள். அப்பாவிகள் உயிர்களை காப்பாற்றுவதற்காக தம் உயிரை கொடுக்க துணிவார்களேத் தவிர, எந்த நேரத்திலும் மக்களின் உயிரை களவாட அவர்கள் களம் அமைத்தது கிடையாது. மக்களின் உயிர்களையும், அவர்களின் உடைமைகளையும் தொடர்ந்து நாசப்படுத்தி, கொன்றொழிக்கும் கூட்டமாக அரச பயங்கரவாத ஆற்றல்கள்தான் உலகெங்கும் இருக்கின்றன. ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாலஸ்தீனம் என தொடர்ச்சியாக அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்படுவது புரட்சியாளர்களால் அல்ல, பயங்கவாதிகளால் தான். தமிழீழ போராட்டக் களத்திலே இதுவரை ஒரு தோட்டாக்கூட அப்பாவி மக்களுக்கு நேரே வீசப்பட்டது கிடையாது. அது, அவர்களின் பணியும் இல்லை. நாம் பகைவனை பணிய வைக்க, படை அணியோடு மட்டும்தான் சமர் செய்தோமேத் தவிர, எந்தநிலையிலும் மக்களோடு அல்ல என்பதை கடந்த கால வரலாறு நிரூபித்திருக்கிறது.
இனி வரும் காலங்களில் நாம் எதிர்பார்க்கலாம், தமிழீழ தேசிய விடுதலைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சிறு சிறு குழுக்கள் கைது, கண்டிப்பு, சித்ரவதை, சிறைச்சாலை என்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படலாம். அதன் தொடக்கமாகத்தான் வாய்க்கு வந்தப்படி பேசும் நிலை உருவாகியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் எல்லை மீறி, தினமலர் என்னும் பார்ப்பனிய ஏடு தலைப்பு செய்தியாகவே சொல்லியிருக்கிறது, புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் என. தமிழீழ தேசிய விடுதலையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் தினமலர் எழுதிய தலைப்பு செய்திக்கு எதிராக குறைந்தபட்சம் தமது எதிர்பையாவது பதிவு செய்ய வேண்டும். யார் குற்றவாளி என்பது கைதுக்குப் பின்னர்கூட தெரியாது. குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கிறது.
நிலைமை இப்படியிருக்க, தினமலர் எப்போது நீதிபதியானது என்பது நமக்கு விளங்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழர்களின் பணத்தை சுரண்டி, தமிழர்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும் தினமலர் போன்ற பார்ப்பனிய ஏடுகளுக்கு எதிராக தமிழர்கள் அணி திரள வேண்டும். அதை கண்டிக்க வேண்டும். இந்தப் போக்கு நீடிக்குமேயானால், நாளை தினமலர் சுட்டிக்காட்டும் எல்லோரும் குற்றவாளிகளாக்கப்படுவார்கள். தமிழ் இன உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக களம் காண வேண்டியது கட்டாயம். மறந்துவிடக் கூடாது. தேசிய தலைவரின் தம்பிகள் ஒருபோதும் மக்களுக்கெதிராக, மக்களின் உயிரை பணையம் வைத்து வெற்றியைப் பெறுவதோ, பழி தீர்ப்பதோ என்கின்ற இழி நிலைக்கு வரமாட்டார்கள். மக்களைக் காக்க தமது உயிரைத் தருவதற்குத்தான் தயாராக களத்திற்கு வருவார்களேத் தவிர, மக்களின் பிணங்களின் மீது தமது வாழ்வை நிறுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். தினமலருக்கு மட்டுமல்ல, தினமலர் சிந்தனை கொண்ட எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது இதுதான். தேசிய தலைவரின் தம்பிகள் உயிர் கொடுப்பவர்கள். உயிர் எடுப்பவர்கள் அல்ல.

ஈழ தமிழர்கள் மீண்டும் போர் தொடுப்பார்கள் .......!!!
ஈழத்தமிழர்கள் மீண்டும் போர்தெடுப்பார்கள்
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும், தற்போதைய அரசவை ஆலோசகருமான லீ குவான் யூ, அந்நிய நாடுகளைப்பற்றி அதிகம் கருத்து சொல்ல மாட்டார்! அத்திபூத்த மாதிரி அவர் சொன்னால், அதை அத்தனை நாடுகளும் படுகவனமாகக் காதில் வாங்கிக்கொள்ளும்! உலக நாடுகள் அத்தனையும் உற்றுப்பார்க்கிற அளவுக்கு சிங்கப்பூரை சூப்பர் ஸ்பீடில் முன்னேற்றிக் காட்டிய இவரின் லேட்டஸ்ட் மன ஓட்டங்களைப்பற்றி 'லீ குவான் யூவுடன் ஓர் உரையாடல்' என்று வெளியாகியுள்ள ஒரு சமீபத்துப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு விஷயங்கள் குறித்து லீ குவான் யூவுடன் தான் பேசியதை... டாம் ப்லேட் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதியுள்ளார். புத்தகத்தின் ஒரு பகுதி, இலங்கை அரசின் அராஜகங்களை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது.
சிங்கப்பூரின் பிதாமகன் உதிர்த்த வார்த்தைகள், ஈழத் தமிழர்களின் மரண ஓலங்களுக்கு மருந்து போடுவதாக இருக்கிறது. இனி புத்தகத்தில் இருந்து....
''இலங்கையில் போர் முடிந்து அமைதி நிலவுகிறது என்று எங்காவது படித்தால், சிரிப்புதான் வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் எதிர்த்து வென்றிருந் தாலும், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருப்பது அநியாயம்!
நான் ராஜபக்ஷேவின் சில பிரசாரங் களையும், மேடைப் பேச்சுகளையும் கேட்டிருக்கிறேன். அதை அலசிப் பார்க்கும்போது, அவரை ஒரு சிங்களத் தீவிரவாதி ('எக்ஸ்ட்ரீமிஸ்ட்') என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவரின் மனதை மாற்றுவது எளிதான காரியம் அல்ல.
மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்பதால் மட்டுமே இலங்கையை ஒரு குடியரசு நாடு என்று கூறிவிட முடியாது. அந்த நாட்டில் வாழும் சிங்களர்களுக்கு உரிமை இருக்கிற அதே அளவு தமிழர்களுக்கும் தரப்பட வேண்டும். ஆனால், அந்த நாட்டு வரலாறைப் புரட்டிப் பார்த்தால், அப்படி இல்லை. ஜாஃப்னாவில் தமிழர்களுக்குச் சிங்களர்களால் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்தாலே, இது புரியும். எனக்கென்னவோ, சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால்தான் தமிழர் களை விரட்டுகின்றனர் என்று தோன்றுகிறது. சிங்களர்களைவிட தமிழர்கள் அதிகச் செயல்திறன் கொண்டவர்கள். அப்படி ஒரு நிலையில், நானும் ஒரு தமிழனாக இருந்திருந்தால், அவர்களை எதிர்த்து இயல்பாகவே கொதித்து எழுந்திருப்பேன்!'' என்று தமிழர்களின் குரலாக அந்தப் புத்தகத்தில் லீ குவான் யூ ஒலித்திருக்கிறார்.
மேலும் அந்தப் புத்தகத்தில், ''சிங்கப் பூரைப் பொறுத்தவரை, இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக, பல இன மக்களும் பாடுபட்டு வந்தாலும், சீனர்களையும் இந்தியர்களையும்போல அயராது உழைப்பவர்களைக் காண்பது அரிது. அதற்காக மனநெருடல் கொண்டு... 'இந்த நாட்டில் வாழ மற்ற இனத்தவர்களுக்கு உரிமை இல்லை' என்று தடையா போடுகிறோம்? நொடிக்கு 10 சாதிக் கலவரம் என்று வெடிக்கும் பல நாடுகளை ஒப்பிடும்போது, எவ்விதச் சண்டையும் சச்சரவும் இன்றி எல்லா இனத்தவர்களும் இங்கே அமைதி யாக வாழ்வது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது.'' என்று ஒரு சிறந்த தலைவனுக்குரிய செருக்கோடு பெருமிதம்கொள்ளும் லீ குவான் யூ,
''நான்காம் கட்ட ஈழப் போரில் தமிழர்களின் இந்தத் தோல்வி தற்காலிக மானதே. அவர்கள் வெகுநாட்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இலங்கை அரசுக்கு எதிராகத் திரும்பவும் போர் தொடுப்பார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை!'' என்று கணித்திருப்பதைத்தான் உலக நாடுகள் சீரியஸாகக் கவனிக்கின்றன.
இவரது கணிப்புகள் பல சமயம் 'நச்'சென்று நிஜமாகிவிடுவதுதான் இதற்குக் காரணம். புகழ்பெற்ற அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர், ''இரண்டு தலைமுறை அமெரிக்க ஜனாதிபதிகள், லீ குவான் யூவின் அறிவுரைகளைக் கருத்தில்கொண்டு நன்மை பெற்றது உண்டு. சீனாவின் எதிர்கால அசுர வளர்ச்சியை முன்கூட்டிச் சொன்னதும் இந்தத் தலைவர்தான். இதனாலேயே, சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த புகழ் பெற்ற தலைவர் டெங்க் சியாவுபிங்க், தனது மிகப் பெரிய முடிவுகளை எல்லாம் லீயிடம் ஆலோசித்த பின்னரே எடுத்தார். அப்படிப் பட்டவரின் கணிப்பை ஒதுக்கித் தள்ள முடியாது!'' என்று அழுத்தமாக அடிக்கோடு சொன்னதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இதைப்பற்றி ராஜபக்ஷே தரப்பினரோ, ''சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால அரசியலில் பெரும்பான்மையான மந்திரிகள் இலங்கைத் தமிழர் களே. சட்டசபையில் அவர்களது எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து வந்தாலும், லீ குவான் யூவுக்கு அவர்கள் மீது ஒரு தனிப் பற்று எப்போதுமே உண்டு.
இலங்கை மீதான அவரது கோபத்துக்கு வேறு காரணமும் உண்டு... இலங்கையும் சிங்கப்பூரின் அளவில் உள்ள, சுற்றுலாவை மையமாகக்கொண்ட சிறிய தீவுதான். சிங்கப்பூரைவிட இங்கு அதிக இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், சிங்கப்பூர் அளவுக்கு இலங்கை வளர்ச்சி அடையாததற்கு காரணம், அங்கு உள்ளது போன்ற சகல வசதிகளுடன் கூடிய துறைமுகம் இல்லை. இதனாலே, பல நாடுகளும் சிங்கப்பூர் மூலமாகத் தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு அந்த நாட்டை வளர்த்தன. இப்படி இருக்கும் நிலையில், தாய்லாந்தில் பல வருடங்களாக முடங்கிக்கிடந்த செயற்கைக் கால்வாய் ('க்ரா கால்வாய்') திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டால், சிங்கப்பூரின் வளர்ச்சி தடை படும். இதன் மூலம் இந்தியா, வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடு களில் வர்த்தகம் பெருகிவிடும். கிடப்பில் கிடந்த அந்தத் திட்டத்தின் பேச்சுவார்த்தை சமீப காலங்களில் அடிபட... அதில் பதறிப்போய்தான் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் லீ'' என்று ஓணானுக்கும் டைனோஸருக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்!
நன்றி ஆனந்தவிகடன்

மீள்பதிவு : அக்கினி புத்திரன்
எம் தாயகம் எத்தனை அழகு....!!
எங்கள் தாயகம் எத்தனை அழகு!!
தாயின் மடிச்சுகத்தையும்,
தாயகமண்ணின் தனிச்சுகத்தையும்,
எழுதத் தொடங்கினால்....
ஏன் பேனா வற்றுவதில்லை?
அமுதசுரபி போலவும்,
அட்சயபாத்திரம் போலவும்
ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு.
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித்
தரையானாலும்,
பச்சை போர்த்த படுக்கைபோல,
பார்க்கும்போது கண்ணில் காதல்
வழிகிறதே.
ஒழுங்கில்லாத ஒற்றையடிப்
பாதைகள்கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின்
தலையைப்போல்
உன்னத அழகோடு
ஓடிவருகின்றனவே
ஏன்?
தொட்டளைந்த பூமியின் சுகமும்,
மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.
எங்கள் அன்னைமடி எத்தனை எழில்.
பிஞ்சுப் பிள்ளைகளின்
மாமரங்கள்போல....
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக்
கன்றுகள் போல....
வெள்ளலைகள் கரையொதுக்கும்
நுரைப்பூக்களைப் போல....
எங்கள் தாயகம் எத்தனை அழகு.
தமிழீழம் சந்தனக்காடு
இதிகாசத்தில் படித்த இந்திரன் பூமி
"தால் ஏரி" காலெடுத்து நடக்கும்
"காஷ்மீரை"
காணக்கண்கோடி வேண்டுமாமே.
"ஹாவாய்" தீவின் கடற்கரையில்
ஒருநாள் நடந்துவிட்டு இறந்தாலே
பிறந்தபலன் பூரணப்படுமாமே!
யார் சொன்னது?
தென்தமிழீழத்தைத் தெரியாத
ஒருவன்
சொல்லியிருக்கலாம்.
மஞ்சள் வெய்யில் மேனிதழுவும்
மாலைநேரம்
கோணமலையில் நின்று கீழே
பாருங்கள்
கோட்டை வாசலில் நிமிர்ந்து நின்று
பாதாளமலையின் பக்கமாக
விழிகளை வீசுங்கள்.
உவமையற்ற அழகை உணர்வீர்கள்.
வார்த்தைகள் தோற்றுப்போகும்.
பேறுகாலத் தாய்மை அழகோடு
நெற்பயிர்கள்
பால்மணிக்கதிர்கள் தள்ளும்
பருவத்தில்
தம்பலகாமத்து வயல்வரம்புகளில்
காலாற நடந்து பாருங்கள்.
காலமழை பொய்க்காத காலத்தில்
கந்தளாய்க் குளம் நிறைந்திருக்கும்
நேரத்தில்
உயர்ந்த அணைக்கட்டில் உட்கார்ந்து
கொண்டு
தாள அசைவுக்குச் சதிராடும்
பெண்களைப்போல
நீளப்பறக்கும் வெண்கொக்குகளை
நிமிர்ந்து பாருங்கள்.
கந்தளாயின் காலடியில்
காஷ்மீர் கைகட்டி நிற்கும்
நிலம் வெளிக்காத புலதிப்பொழுதில்
"வெருகல்|" வேலன் திருவிழாக்
காலத்தில்
மாவலி கங்கையின் மடியிலே
விழுங்கள்.
கொட்டியாரக் குடாக்கடல் தேடி
கை நீட்டி வந்துகட்டித் தழுவும்
ஆற்றின் அருகில் அமர்ந்து
கொள்ளுங்கள்
எங்கள் தாயகம் எத்தனை அழகு!
தென்தமிழீழம் சுந்தரப் பூமி
கன்னங்குடா,
பட்டித்திடல்
இன்னும் இன்னும் எத்தனை ஊர்கள்
அத்தனையும் அழகு.
வெள்ளிநிலா
விளக்கேற்றிக்கொள்ளும்
நள்ளிரவில்
புளியந்தீவில் பொன்னாவரசு
பூத்திருக்கும் காலத்தில்
மட்டுநகர் வாவிக்கு வாருங்கள்.
மேலே பெண்ணுருவம், கீழே
மீனுருவம் கொண்ட
"நீரரமகளிர்"
குரலெடுத்துப் பாடிக் குளிப்பார்கள்.
படகெடுத்துப் பக்கத்தில் போனால்
முகம் மறைந்து
முக்குளித்துவிடுவார்கள்.
கற்பனையென்றாலும் எத்தனை சுகம்!
மட்டக்களப்பு புல்வெளிகளில்
மேய்ச்சல் முடிந்து வீடுதிரும்பும்
பசுக்களின்
மடிசுரந்து வீதியெங்கும்
வெள்ளமாகும்
கன்றை நினைத்து கால்களை
நனைக்கும்.
வண்டு துளைபோட்ட மூங்கில்
காடுகள்
வாத்தியம் இசைக்கும்.
காடாய்ப் பரவிய கரும்புக்காட்டில்
நிலத்து நீரைத் தண்டுகள்
உறிஞ்சுவதில்லை
கரும்புச் சாறைத்தான் நிலம் குடித்துக்
கொள்கிறது.
இலங்கை இந்து சமுத்திரத்தில்
மிதக்கும்
ஒரு தீவு
ஆனால் இரண்டு நாடுகள்.
தமிழீழம் பருவநிலை மாறுபடும்
பகுதிகள் அடங்கிய
பரந்த தேசமல்ல....
ஒரேநாளில்
உதயத்தை காங்கேசன்துறையிலும்
அஸ்தமனத்தை அக்கரைப்பற்றிலும்
பார்த்துவிட்டுப் படுக்கைக்குப்
போகலாம்.
மட்கடகளப்பின் முட்டித்தயிர்
புளிக்க முன்னர்
புங்குடுதீவு திருமணமொன்றின்
பந்தியிலே பரிமாறப்படும்.
யாழ்ப்பாணத்துக் "கறுத்தக்
கொழும்பான்" அழுக முன்னர்
திருக்கோவிலில் தெருக்களில்
விற்பனைக்கிருக்கும்
வடதமிழீழம் வறண்டது@
வறண்டதே தவிர சுருண்டதல்ல.
தென்தமிழீழம் செழிப்பானது
செழிப்பானதே தவிர
செருக்கானதல்ல.
திருமலை தமிழீழத்தின் தலைநகர்.
எங்கள் வானத்துக்கு நிலவு
ஒன்றுதான்
தலைவனும் ஒருவன்தான்.
இன்று, மனங்களை அடைத்து நின்ற
மலைகளெல்லாம்
விடுதலை அதிர்வால்
வெடித்துச் சிதறுகின்றன.
போராட்டத்தீயால் பொசுங்கி
எரிகின்றன.
தென்தமிழீழம்
எங்கள் தாயகத்தின் தலைவாசல்.
தானியக் களஞ்சியம்
பாலும் தயிரும் பயிருக்குப் பாய்ச்சும்
நிலம்.
இன்று
தமிழரின் குருதி பாயும் நிலம்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டுவோம்
எதிரியைக் கலைத்து எல்லையைப்
பூட்டுவோம்...!!
வரியமைப்பு :வியாசன்
மீள்பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
தாயின் மடிச்சுகத்தையும்,
தாயகமண்ணின் தனிச்சுகத்தையும்,
எழுதத் தொடங்கினால்....
ஏன் பேனா வற்றுவதில்லை?
அமுதசுரபி போலவும்,
அட்சயபாத்திரம் போலவும்
ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு.
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித்
தரையானாலும்,
பச்சை போர்த்த படுக்கைபோல,
பார்க்கும்போது கண்ணில் காதல்
வழிகிறதே.
ஒழுங்கில்லாத ஒற்றையடிப்
பாதைகள்கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின்
தலையைப்போல்
உன்னத அழகோடு
ஓடிவருகின்றனவே
ஏன்?
தொட்டளைந்த பூமியின் சுகமும்,
மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.
எங்கள் அன்னைமடி எத்தனை எழில்.
பிஞ்சுப் பிள்ளைகளின்
மாமரங்கள்போல....
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக்
கன்றுகள் போல....
வெள்ளலைகள் கரையொதுக்கும்
நுரைப்பூக்களைப் போல....
எங்கள் தாயகம் எத்தனை அழகு.
தமிழீழம் சந்தனக்காடு
இதிகாசத்தில் படித்த இந்திரன் பூமி
"தால் ஏரி" காலெடுத்து நடக்கும்
"காஷ்மீரை"
காணக்கண்கோடி வேண்டுமாமே.
"ஹாவாய்" தீவின் கடற்கரையில்
ஒருநாள் நடந்துவிட்டு இறந்தாலே
பிறந்தபலன் பூரணப்படுமாமே!
யார் சொன்னது?
தென்தமிழீழத்தைத் தெரியாத
ஒருவன்
சொல்லியிருக்கலாம்.
மஞ்சள் வெய்யில் மேனிதழுவும்
மாலைநேரம்
கோணமலையில் நின்று கீழே
பாருங்கள்
கோட்டை வாசலில் நிமிர்ந்து நின்று
பாதாளமலையின் பக்கமாக
விழிகளை வீசுங்கள்.
உவமையற்ற அழகை உணர்வீர்கள்.
வார்த்தைகள் தோற்றுப்போகும்.
பேறுகாலத் தாய்மை அழகோடு
நெற்பயிர்கள்
பால்மணிக்கதிர்கள் தள்ளும்
பருவத்தில்
தம்பலகாமத்து வயல்வரம்புகளில்
காலாற நடந்து பாருங்கள்.
காலமழை பொய்க்காத காலத்தில்
கந்தளாய்க் குளம் நிறைந்திருக்கும்
நேரத்தில்
உயர்ந்த அணைக்கட்டில் உட்கார்ந்து
கொண்டு
தாள அசைவுக்குச் சதிராடும்
பெண்களைப்போல
நீளப்பறக்கும் வெண்கொக்குகளை
நிமிர்ந்து பாருங்கள்.
கந்தளாயின் காலடியில்
காஷ்மீர் கைகட்டி நிற்கும்
நிலம் வெளிக்காத புலதிப்பொழுதில்
"வெருகல்|" வேலன் திருவிழாக்
காலத்தில்
மாவலி கங்கையின் மடியிலே
விழுங்கள்.
கொட்டியாரக் குடாக்கடல் தேடி
கை நீட்டி வந்துகட்டித் தழுவும்
ஆற்றின் அருகில் அமர்ந்து
கொள்ளுங்கள்
எங்கள் தாயகம் எத்தனை அழகு!
தென்தமிழீழம் சுந்தரப் பூமி
கன்னங்குடா,
பட்டித்திடல்
இன்னும் இன்னும் எத்தனை ஊர்கள்
அத்தனையும் அழகு.
வெள்ளிநிலா
விளக்கேற்றிக்கொள்ளும்
நள்ளிரவில்
புளியந்தீவில் பொன்னாவரசு
பூத்திருக்கும் காலத்தில்
மட்டுநகர் வாவிக்கு வாருங்கள்.
மேலே பெண்ணுருவம், கீழே
மீனுருவம் கொண்ட
"நீரரமகளிர்"
குரலெடுத்துப் பாடிக் குளிப்பார்கள்.
படகெடுத்துப் பக்கத்தில் போனால்
முகம் மறைந்து
முக்குளித்துவிடுவார்கள்.
கற்பனையென்றாலும் எத்தனை சுகம்!
மட்டக்களப்பு புல்வெளிகளில்
மேய்ச்சல் முடிந்து வீடுதிரும்பும்
பசுக்களின்
மடிசுரந்து வீதியெங்கும்
வெள்ளமாகும்
கன்றை நினைத்து கால்களை
நனைக்கும்.
வண்டு துளைபோட்ட மூங்கில்
காடுகள்
வாத்தியம் இசைக்கும்.
காடாய்ப் பரவிய கரும்புக்காட்டில்
நிலத்து நீரைத் தண்டுகள்
உறிஞ்சுவதில்லை
கரும்புச் சாறைத்தான் நிலம் குடித்துக்
கொள்கிறது.
இலங்கை இந்து சமுத்திரத்தில்
மிதக்கும்
ஒரு தீவு
ஆனால் இரண்டு நாடுகள்.
தமிழீழம் பருவநிலை மாறுபடும்
பகுதிகள் அடங்கிய
பரந்த தேசமல்ல....
ஒரேநாளில்
உதயத்தை காங்கேசன்துறையிலும்
அஸ்தமனத்தை அக்கரைப்பற்றிலும்
பார்த்துவிட்டுப் படுக்கைக்குப்
போகலாம்.
மட்கடகளப்பின் முட்டித்தயிர்
புளிக்க முன்னர்
புங்குடுதீவு திருமணமொன்றின்
பந்தியிலே பரிமாறப்படும்.
யாழ்ப்பாணத்துக் "கறுத்தக்
கொழும்பான்" அழுக முன்னர்
திருக்கோவிலில் தெருக்களில்
விற்பனைக்கிருக்கும்
வடதமிழீழம் வறண்டது@
வறண்டதே தவிர சுருண்டதல்ல.
தென்தமிழீழம் செழிப்பானது
செழிப்பானதே தவிர
செருக்கானதல்ல.
திருமலை தமிழீழத்தின் தலைநகர்.
எங்கள் வானத்துக்கு நிலவு
ஒன்றுதான்
தலைவனும் ஒருவன்தான்.
இன்று, மனங்களை அடைத்து நின்ற
மலைகளெல்லாம்
விடுதலை அதிர்வால்
வெடித்துச் சிதறுகின்றன.
போராட்டத்தீயால் பொசுங்கி
எரிகின்றன.
தென்தமிழீழம்
எங்கள் தாயகத்தின் தலைவாசல்.
தானியக் களஞ்சியம்
பாலும் தயிரும் பயிருக்குப் பாய்ச்சும்
நிலம்.
இன்று
தமிழரின் குருதி பாயும் நிலம்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டுவோம்
எதிரியைக் கலைத்து எல்லையைப்
பூட்டுவோம்...!!
வரியமைப்பு :வியாசன்
மீள்பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
Subscribe to:
Posts (Atom)